Tamil News
Home செய்திகள் இலங்கை வந்துள்ள சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களுக்கு விஜயம்

இலங்கை வந்துள்ள சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களுக்கு விஜயம்

சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோ இலங்கை வந்துள்ளார்.

நேற்றிரவு இலங்கை வந்த அவர் தனது 5 நாள் விஜயத்தின் போது கொழும்பு, கண்டி, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

வாங்கின் விஜயத்தின் போது யுனான் மக்கள் அரசாங்கத்தின் வெளியுறவு அலுவலகத்திற்கும் இலங்கையின் வெளிவிவகாரத் திணைக்களத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.இது தொடர்பான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனான் மக்கள் தொகை 5 கோடியாகும். அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 417 பில்லியன் டொலர்களாகும். அத்துடன், யுனான் இலங்கையுடன் வரலாற்று ரீதியான நட்புறவையும் கொண்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version