கூட்டமைப்பை பழிவாங்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம்  செய்து வருகின்றது-தவராசா கலையரசன்

625.500.560.350.160.300.053.800.900.160.90 கூட்டமைப்பை பழிவாங்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம்  செய்து வருகின்றது-தவராசா கலையரசன்

இலங்கையில் ஜனநாயகம், சிறுபான்மை சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாகக் குரல் கொடுப்பதன் காரணமாக எங்களைப் பழிவாங்குகின்ற செயற்பாடுகளை  அரசாங்கம்  செய்து வருகின்றது என  பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சாடியுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்  இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்,

“எமது அரசியல் ரீதியான செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது எங்களுக்கு வருடாந்தம் வழங்கக் கூடிய பாதீட்டு நிதியைத் தவிர அரசாங்கத்தினால் வேறு எந்த நிதி மூலங்களும் வழங்கக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

இந்த நாட்டின் ஜனநாயகம், சிறுபான்மை சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாகக் குரல் கொடுப்பதன் காரணமாக எங்களைப் பழிவாங்குகின்ற அல்லது மக்கள் மத்தியில் இருந்து முற்றாக வெளியேற்றக் கூடிய செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முழுமூச்சாகச் செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் நாங்கள் பல சவால்களுக்கு முகங்கொடுத்தே எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021