கோட்டா அரசில் இருந்து வெளியேறியது சுதந்திர கட்சி

வெளியேறியது சுதந்திர கட்சி

வெளியேறியது சுதந்திர கட்சி

கோட்டாபய ராஜபக்ச அரசில் இருந்து வெளியேறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரித்துள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படும் நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி குழுவினர் பங்குபற்றலுடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்தே, சுதந்திரக்கட்சி தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.