கோவிட்-19 நான்காவது அலை – ஐரோப்பிய நாடுகள் அச்சம்

ஐரோப்பிய நாடுகள் அச்சம்

கோவிட்-19 நோயானது கடந்த இரண்டு வருடங்களாக உலகின் இயக்கத்தை முடக்கிப் போட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் அதன் தாக்கம் மிகவும் அதிகரி த்துள்ளது.

 ஓஸ்ரியா முழு அளவிலான முடக்க நிலையை அறிவித்துள்ளதுடன், ஏனைய நாடுகளும் அது தொடர்பில் சிந்தித்து வருகின்றன. ஜேர்மனியில் வெகுவாக அதிகரிக் கும் தொற்றுக்களால் நத்தார் தின வியாபாரமும் பாதிப்டைந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிரித்தானியாவில் 46,000 பேரும், ஜேர்மனியில் 65,000 பேரும், ஒஸ்ரியாவில் 15,000 பேரும் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். மேலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் தொற்று விகிதம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இரண்டு தடுப்பூசிகளை போட்டவர்களையும்புதிய டெல்ரா வகை வைரஸ் தாக்கி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவிய கோவிட்-19 நோயினால் இதுவரையில் உலகம் எங்கும் 5.15 மில்லியன் மக்கள் உயிரிழந்ததுடன், 257 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் உலகம் மிகப்பெரும் பொருளாதார அழிவையும் சந்தித்து வருகின்றது.