மிகவும் ஆபத்தான் நிலையில் மலையகத்தின் உணவுபாதுகாப்பு நிலை- புதிய அறிக்கையில் தகவல்

இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என உலக உணவுதிட்டம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதார உணவு நெருக்கடியின் சுமையை இலங்கை மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள உலக உணவுதிட்டம் பத்தில் மூன்றுவீடு உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6.2 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் இதில் 65,600 மக்கள் மிகமோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் எனவும் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

2022 ஆண்டு ஜூன் மாதம் உணவுப்பணவீக்கம் 57.4 வீதமாக காணப்பட்டது உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பெறுவதற்கான மக்களின் திறனை மோசமாக பாதித்துள்ளது எனவும் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டிற்கு உட்படுத்தபட்ட வீடுகளில் பெரும்பாலானவை ( 61வீதமானவை) உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன,குறைவான விருப்பத்திற்குரிய ,சத்துகுறைவான உணவுகளை  உண்பது நாளாந்தம் உண்ணும் உணவைகுறைப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான அளவு உணவுகளை உண்பதில்லை எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் உணவுபாதுகாப்பு நிலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது அங்கு அரைவாசிக்கும் மேற்பட்ட வீடுகள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றன எனவும் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உலக உணவுதிட்டம் உணவுப்பாதுகாப்பு மற்றும் அதனை சமாளிக்கும் நடவடிக்கைகளில் நகர மற்றும் கிராமமக்களை விட இவர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நகரப்புற மக்கள் தற்போதைய நிலையை சமாளிப்பதற்கு சேமிப்பை பயன்படுத்தும் அதேவேளை மலையக மக்கள் உணவு மற்றும் அத்தியாவசியபொருட்களை கொள்வனவு செய்வதற்கு கடனை நாட தொடங்கியுள்ளனர் எனவும் ஐநாவின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சுமார் 200,000 குடும்பங்கள் அவசரகால வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளை பயன்படுத்துகின்றன இதன்காரணமாக வருமானம் பெறுவதற்கான அவர்களின் திறன் பாதிக்கப்படும் எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.