டெல்டாவை கட்டுப்படுத்தாவிட்டால் ஐந்தாவது அலையை தடுக்கமுடியாது; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஐந்தாவது அலையை தடுக்கமுடியாது ஐந்தாவது அலையை தடுக்கமுடியாது: நாட்டில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வேகமாகப் பரவிவரும் டெல்டாவை கட்டுப்படுத்தா விட்டால் ஐந்தாவது அலையை தடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவிட்டால் ஐந்தாவது அலை உருவாவதை தடுக்க முடியாமல் போகும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

“நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கி வைத்திருப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும். அவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர் கொள்ளும், இதிலிருந்து மீள்வதற்கு பல வருடங்கள் எடுக்கும்” என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

“கொரோனா வைரசின் புதிய பிறழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்பு சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எப்போதும் உள்ளன” என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு இந்த நிலையை எதிர்கொள்ள தயாராக விட்டால் மக்களிற்கு பெரும் ஆபத்து ஏற்படக் கூடும் என தெரிவித்துள்ளது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021