Tamil News
Home செய்திகள் அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களுக்கு பின்னே உள்ள குரூரம்

அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களுக்கு பின்னே உள்ள குரூரம்

அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா, நவுரு ஆகிய தீவுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த அகதிகளின் சாட்சியங்களை  மாரிஸ் பிளாக்பர்ன் எனும் சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இந்த சாட்சியங்கள் எப்படி அகதிகள் இழிவுபடுத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில், பல ஆண்டுகளாக அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.

அந்த வகையில், ஈரானைச் சேர்ந்த இளம் அகதி ஒருவர் குடும்பத்துடன் நவுருத்தீவில் சிறைவைக்கப்பட்ட சூழலை பகிர்ந்திருக்கிறார். தனது நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த போது, முகாமின் நிலைமைகளைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்ட அனுபவத்தை அவர் கூறியிருக்கிறார்.

அதில்,“இந்த போராட்டங்களின் போது பல அகதிகள் தங்களது உதடுகளைத் தைத்துக் கொண்டனர். நானே ஒருமுறை அவ்வாறு தைத்துக் கொள்ள முயற்சித்தேன். பல சமயங்களில் அகதிகள் வருத்திக்கொள்ளவும் தற்கொலைக்கு முயலவும் செய்ததைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு அகதி தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டதையும் கண்டேன். எனது நண்பன் உயிரிழந்த போது நானே தற்கொலைக்கு முயன்றேன்,” என தெரிவித்திருக்கிறார் அந்த ஈரானிய அகதி.

மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலை பகிர்ந்த பர்மிய அகதி, “அவுஸ்திரேலிய, உள்ளூர் (பப்பு நியூ கினியா) காவலாளிகள்  எனது கண்களையும் வாயையும் தாக்கினர். கடினமான காலணிகளை அணிந்திருந்த அவர்களின் ஒவ்வொரு உதையும் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலினால் எனது ஆறு பற்களை இழந்தேன், எனது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது,” என அவர் கூறியிருக்கிறார்.

இப்படி பல நாட்டு அகதிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்திருக்கின்றனர்.இவ்வாறு அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசின் தரவுகளின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அகதிகள் சபை விரிவான தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஓகஸ்ட் 2012 முதல் இத்தடுப்பு முகாம்களில் 4,183 அகதிகள் சிறைவைக்கப்பட்டிருந்திருக்கின்றனர். பப்பு நியூ கினியாவில் அவுஸ்திரேலியா அகதிகளைத்தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என கடந்த 2016ம் ஆண்டு அத்தீவு நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பப்பு நியூ கினியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 1,923 அகதிகளுக்கு 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அகதிகள் சிறைவைக்கப்பட்டிருந்த கால அளவு, உடற்காயங்களின் அடிப்படையில் அப்பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இம்முகாம்களில் இருந்த பெரும்பாலான அகதிகள் வேறொரு நாட்டிலோ அல்லது அவுஸ்திரேலியாவிலோ மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 749 அகதிகள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 2023 கணக்குப்படி, பப்பு நியூ கினியாவில் 105 அகதிகளும் நவுருத்தீவில் 61 அகதிகளும் இன்னும் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.இந்த சூழலில், அவுஸ்திரேலியா  பாணியில் அகதிகளை கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கும் முறையினை ஐக்கிய இராச்சியம் நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா, நவுரு ஆகிய தீவுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த அகதிகளின் சாட்சியங்களை  மாரிஸ் பிளாக்பர்ன் எனும் சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சாட்சியங்கள் எப்படி அகதிகள் இழிவுபடுத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில், பல ஆண்டுகளாக அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.

அந்த வகையில், ஈரானைச் சேர்ந்த இளம் அகதி ஒருவர் குடும்பத்துடன் நவுருத்தீவில் சிறைவைக்கப்பட்ட சூழலை பகிர்ந்திருக்கிறார். தனது நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த போது, முகாமின் நிலைமைகளைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்ட அனுபவத்தை அவர் கூறியிருக்கிறார்.

அதில்,“இந்த போராட்டங்களின் போது பல அகதிகள் தங்களது உதடுகளைத் தைத்துக் கொண்டனர். நானே ஒருமுறை அவ்வாறு தைத்துக் கொள்ள முயற்சித்தேன். பல சமயங்களில் அகதிகள் வருத்திக்கொள்ளவும் தற்கொலைக்கு முயலவும் செய்ததைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு அகதி தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டதையும் கண்டேன். எனது நண்பன் உயிரிழந்த போது நானே தற்கொலைக்கு முயன்றேன்,” என தெரிவித்திருக்கிறார் அந்த ஈரானிய அகதி.

மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலை பகிர்ந்த பர்மிய அகதி, “அவுஸ்திரேலிய, உள்ளூர் (பப்பு நியூ கினியா) காவலாளிகள்  எனது கண்களையும் வாயையும் தாக்கினர். கடினமான காலணிகளை அணிந்திருந்த அவர்களின் ஒவ்வொரு உதையும் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலினால் எனது ஆறு பற்களை இழந்தேன், எனது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது,” என அவர் கூறியிருக்கிறார்.  இப்படி பல நாட்டு  அகதிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்திருக்கின்றனர்.

இவ்வாறு அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசின் தரவுகளின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அகதிகள் சபை விரிவான தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஓகஸ்ட் 2012 முதல் இத்தடுப்பு முகாம்களில் 4,183 அகதிகள் சிறைவைக்கப்பட்டிருந்திருக்கின்றனர். பப்பு நியூ கினியாவில் அவுஸ்திரேலியா அகதிகளைத் தடுத்து வைப்பது சட்டவிரோதமானது என கடந்த 2016ம் ஆண்டு அத்தீவு நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக பப்பு நியூ கினியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 1,923 அகதிகளுக்கு 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அகதிகள் சிறைவைக்கப்பட்டிருந்த கால அளவு, உடற்காயங்களின் அடிப்படையில் அப்பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இம்முகாம்களில் இருந்த பெரும்பாலான அகதிகள் வேறொரு நாட்டிலோ அல்லது அவுஸ்திரேலியாவிலோ மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 749 அகதிகள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 2023 கணக்குப்படி, பப்பு நியூ கினியாவில் 105 அகதிகளும் நவுருத்தீவில் 61 அகதிகளும் இன்னும் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சூழலில்,அவுஸ்திரேலியா பாணியில் அகதிகளை கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கும் முறையினை ஐக்கிய இராச்சியம் நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version