Tamil News
Home செய்திகள் இரண்டு ஆண்டுகளுக்குள் கொரோனா முடிவிற்கு வரும் உலக சுகாதார நிறுவனம் 

இரண்டு ஆண்டுகளுக்குள் கொரோனா முடிவிற்கு வரும் உலக சுகாதார நிறுவனம் 

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை கொரோனாவின் தாக்கமும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

மேலும்  கொரோனா 2 ஆண்டுகளுக்குள் முடிவிற்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை அவர் நடத்தியிருந்தார். அதில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

உலகமயமாதல், நெருக்க தொடர்பில் இருத்தல் போன்றவை நமக்கு குறைபாடுகளாக உள்ளது. ஆனால் நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ளது. ஆகையால் இந்தக் கொரோனா தொற்றை 2 ஆண்டுகளுக்குள் முடிவிற்குக் கொண்டு வந்து விடலாம்.

தற்போது இருக்கும் யுக்திகளை அதிகபட்சமாக பயன்படுத்த ணே்டும். கூடுதலாக கொரோனாவிற்கு தடுப்புசி கிடைக்கும் பட்சத்தில் நாம் இந்த வைரசை 1918ஆம் ஆண்டில் உருவான ஸ்பானிஷ் புளு முடிவடைந்த காலகட்டத்திற்கு முன்னரே இதை முடிவிற்குக் கொண்டு வந்து விடலாம் எனக் குறிப்பிட்டார்.

1918ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ஸ்பானிஷ் புளு என்ற வைரஸ் உலகையே உலுக்கியது. இதன் தாக்கத்தால் உலகம் முழுவதும் 5கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 2 ஆண்டுகள் இதன் தாக்கம் நீடித்தது. அதன் பின்னரே இந்த கொடிய வைரஸிலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு பழைய நிலைக்குத் திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version