Home செய்திகள் சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது – அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர்

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது – அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர்

IMG 20221129 WA0021 1 சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது - அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர்

இலங்கையில் இருந்து  அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன், சட்டவிரோத குடியேற்றவாசிகளை காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் கைது செய்து திருப்பி அனுப்புவார்கள். எனவே  சட்டவிரோத ஆள்கடத்தல்காரரிடம் உங்கள் பணத்தையும் உயிரையும் பணயம் வைத்து பயணிக்கவேண்டாம் என இலங்கை அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் காவல்துறையினர் றோபர் வில்சன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத ஆள்கடத்தல் தொடர்பாக மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜ.பி.ரி சுகதபால தலைமையிலான காவல்துறை  அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உடன் இலங்கை  அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் காவல்துறை றோபர் வில்சன் தலைமையிலான ஃபெடரல் காவல்துறை  ஊடக அதிகாரி மைக்கல் உட்பட காவல்துறை  அதிகாரிகள்  இடையே நேற்று செவ்வாய்க்கிழமை காவல்துறை  அத்தியட்சகர் காரியலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் தொடர்ச்சியாக  அவுஸ்திரேலியாவுக்கு ஆள்கடத்தல்காரர் ஊடாக குடியேற முயற்சித்தனர். இவர்களை  அவுஸ்திரேலியா காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் கைது செய்து திருப்பி அனுப்பினர்.

எனவே எப்போதும்  அவுஸ்திரேலியா சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ஏற்றுக் கொள்ளாது. எனவே உங்களுடைய பணத்தையும் உயிரையும் சட்டவிரோத ஆள்கடத்தல் காரர்களிடம் கொடுத்து ஏமாறவேண்டாம். ஆகவே இதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

 இலங்கை பொலிஸாருடன்  அவுஸ்திரேலியா காவல்துறையினர் இணைந்து இந்த ஆள்கடத்தல் கும்பல் தொடர்பாக தகவல் பரிமாறவுள்ளதுடன் ஆள்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்துக்குமுன் நிறுத்த இரண்டு நாட்டு பொலிஸாரும் கூட்டாக  செயற்படும் என்றார்.

இதனை தொடர்ந்து இலங்கை  அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தலைமையிலான ஃபெடரல் காவல்துறை  ஊடக அதிகாரி மைக்கல் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற சீயோன் தேவாலயத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version