துருக்கி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி

மத்திய இஸ்தான்புல்லியின் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற  குண்டுவெடிப்பில்  6 பேர் கொல்லப்பட்டு, 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 4:20 மணியளவில் தக்சிம் சதுக்கம் பகுதியிலுள்ள ஒரு கடை வீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்தான்புல் நகர ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

இது குறித்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள துருக்கி உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் சுலைமான் சாய்லு, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். இக்கட்சி துருக்கியில் இருக்கும் குர்திஸ்தான் பகுதியை தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்று கோரும் ஆயுதக் குழுவாகும்.

துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே, குண்டுவெடிப்பு ஒரு பெண்ணால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.