Tamil News
Home செய்திகள் அவசரகால பிரகடனத்திற்கு ஆதரவாக பத்து சுயேச்சைக் கட்சிகள்

அவசரகால பிரகடனத்திற்கு ஆதரவாக பத்து சுயேச்சைக் கட்சிகள்

இன்று (ஜூலை 27) நடைபெறும் பாராளுமன்ற விவாதத்தில் அவசரகாலச் சட்டத்தை ஆதரிப்பதற்கு பாராளுமன்றத்தில் உள்ள 10 சுயேச்சை அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நேற்று மாலை இடம்பெற்ற சுயேச்சைக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, அவசரகாலச் சட்டப் பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார் .

இந்நிலையில், அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கருத்து வெளியிடும் உரிமை, போராட்டங்கள் நடத்தும் உரிமை, பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவற்றை நசுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அவசரகால பிரகடனத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடியுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version