Home செய்திகள் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை

WhatsApp Image 2021 07 15 at 2.51.47 PM திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தமிழீழத் தமிழர்கள் அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ‘சோழன் குடில்’ தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் கோரிக்கை விடுத்திருந்தார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் தனிச் சிறையில், இந்திய எல்லைக்குள் அத்து மீறி மீன் பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்கு முடிவுற்று தடுத்து வைக்கப் பட்டிருந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த எட்டு தமிழ் மீனவர்களும்  கொரோனா  பயணத் தடை காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இருந்த  இரண்டு பேருமாக 10 பேரை இலங்கைக்கு  அனுப்பி வைக்க தமிழக அரசால்  இன்று நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பில்  வ.கௌதமன்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“நாங்கள் தொடர்ந்து எடுத்த பெரு முயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத் தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல் துறை அதிகாரிகளுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர், மறுவாழ்வுத் துறை ஆணையர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத் துறை அமைச்சர் ஐயா மஸ்தான் அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.

இதே போன்று மீதமுள்ள தமிழீழத் தமிழர்கள் அனைவரையும் விரைவில் விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தினரோடு  சேர்ப்பிக்க வேண்டுமென மீண்டும் வேண்டுகோள் வைக்கிறேன்.

அதே நேரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் ஏனைய அகதிகளை வருகின்ற 20-ஆம் திகதிக்குள் விடுதலை செய்வதாக தமிழக மறுவாழ்வு துறை அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை ஏற்று காத்திருக் கின்றோம்” என்று கூறியுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version