Home செய்திகள் தமிழர்களிற்கு தங்கள் தாயகத்தில் சுயநிர்ணய உரிமை அவசியம்-பிரிட்டன் நாடாளுமன்ற கறுப்பு ஜூலை நிகழ்வில் வேண்டுகோள்

தமிழர்களிற்கு தங்கள் தாயகத்தில் சுயநிர்ணய உரிமை அவசியம்-பிரிட்டன் நாடாளுமன்ற கறுப்பு ஜூலை நிகழ்வில் வேண்டுகோள்

யுத்த குற்றங்கள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை  விதிக்கவேண்டும்- பிரிட்டன் நாடாளுமன்ற கறுப்பு ஜூலை ...

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில் கறுப்பு ஜூலையின் நாற்பதாவது வருட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள்

தற்போதைய நல்லிணக்க மற்றும் உண்மை ஆணைக்குழு உட்பட இலங்கையில் உருவாக்கப்பட்ட  அணைத்து ஆணைக்குழுக்களும்  சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டன.

யுத்த குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை ஆகியவற்றில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்,இதன் மூலம்  ஏனைய உலக நாடுகளிற்கு முன்னுதாரணமாக  பிரிட்டன் விளங்கவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்ஜெயவர்த்தனவின் உறவினரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  நம்பகதன்மை குறித்தும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கையில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

எதிர்காலத்தில் இனப்படுகொலைகளை தடுப்பதற்காக ஐக்கியப்படுவது என  நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்  தங்களை அர்ப்பணித்தனர்.தமிழர்களிற்கு தங்கள் தாயகத்தில் சுயநிர்ணய உரிமை அவசியம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version