Home செய்திகள் பல போராட்டங்களுக்குப் பின்னர் முன்பு வாழ்ந்த அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

பல போராட்டங்களுக்குப் பின்னர் முன்பு வாழ்ந்த அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலிய நகருக்கு திரும்பிய தமிழ் அகதி குடும்பம்

“மீண்டும் பிலோலா சமூகத்தை நோக்கிய எங்களது பயணம் குறித்து நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறோம். பெர்த்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி. லவ் யூ பெர்த்,” என பிரியா நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த சூழலில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு.

பின்னர், கடந்தாண்டு முதல் பெர்த் நகரில் சமூகக் காவலில் இக்குடும்பம் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இவர்கள் பிலோலா பகுதிக்கு திரும்ப அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

Exit mobile version