தமிழ் நாடு வரும் ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.  அமெரிக்கு டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்து இருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தோடு அரசுக்கு எதிரான போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்திற்கு மீண்டும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக செல்லத் தொடங்கியுள்ளனர். மிகவும் ஆபத்தான கடல் வழிப்பயணம் மூலம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்கள் மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு  அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வெளியிட்டுள்ள முழு அறிக்கையைக் காண, கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்…

அதே நேரம் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் பல கட்சிகளும் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்நிலையில், ஈழத்தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருவதாக சட்ட சபையில் குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ் நாடு வரும் ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.