Home செய்திகள் ரெலோ அழைத்துள்ள கூட்டத்தில் தமிழரசு பங்கேற்காது; அரசியல் குழு நேற்றிரவு முடிவு

ரெலோ அழைத்துள்ள கூட்டத்தில் தமிழரசு பங்கேற்காது; அரசியல் குழு நேற்றிரவு முடிவு

ரெலோ அழைத்துள்ள கூட்டத்தில் தமிழரசு பங்கேற்காது
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு இந்தியாவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தல் என்ற நோக்கத்தின் பெயரில் வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ரெலோ அழைத்துள்ள கூட்டத்தில் தமிழரசு பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவை 6ஆம் திகதி அளவில் கூட்டவும், மேற்படி விடயத்தில் ரெலோ வழங்கியுள்ள அழைப்பை அந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கவும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுநேற்றிரவு தீர்மானித்தது.

அரசியல் குழுவின் கூட்டம் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் “சூம்’ முறையில் நடைபெற்றது. பதில் பொதுச் செயலாளர் டாக்டர் ப.சத்தியலிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர்கள் செல்வராசா மற்றும் சீ.வீ.கே. சிவஞானம், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., ஸ்ரீதரன் எம்.பி., முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோர் பங்குபற்றினர்.

கலையரசன் எம்.பியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் நேற்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

Exit mobile version