64 இலங்கை அகதிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-விசிக கோரிக்கை

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


64 இலங்கை அகதிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று, மாலத்தீவு அருகே சர்வதேச காவல்துறையினரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 பேர் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி   கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டு கடல் கடல் வழி பயணம் மேற்கொடதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில்,மாலத்தீவு அருகே உள்ள டிக்கோ கார்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவர்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இந்நிலையில்,“புலம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த 64 தமிழர்களை மீட்கும் நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசோ அல்லது வெளிவிவகாரத்துறை அமைச்சகமோ  இது தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி – தினத் தந்தி

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad 64 இலங்கை அகதிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-விசிக கோரிக்கை