Home செய்திகள் தமிழீத் தேசியக் கொடி நாள் – பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி நிகழ்வு

தமிழீத் தேசியக் கொடி நாள் – பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி நிகழ்வு

WhatsApp Image 2022 11 23 at 2.10.43 AM 1 தமிழீத் தேசியக் கொடி நாள் - பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் எழுச்சி நிகழ்வு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பல தமிழ் அமைப்புகள் இணைந்து மாவீரர்களின் பெற்றோர்களினால் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழீழ தேசியக் கொடி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணிமனையில் இருந்து கொண்டுவரப்பட்டு, பிரித்தானிய பிரதமரின் பணிமனைக்கு முன்னால் மிக  சிறப்பாக “தமிழீழத் தேசியக் கொடி நாளான நவம்பர் 21ம் திகதி” ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

இங்கு மங்கள விளக்கை இளையோர்கள் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து  தமிழீழ தேசியக் கொடியை அறிவழகன் ஏற்றிவைத்தார். பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்புக்குரிய பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரின் உரையை நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசியல் துறையின் பிரதி அமைச்சர் பார்த்தீபன் வாசித்தார்.

அதனை தொடர்ந்து பாலா மாஸ்ரர் தமிழீழ தேசியக் கொடியின் மகத்துவத்தையும், அதன் தேவையையும் பற்றி எடுத்துக் கூறினார். அவரை தொடர்ந்து  நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் பணிமனையின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம்  யோகலிங்கம் (யோகி) தமிழீழ தோசியக்கொடியை ஏன் தமிழர்கள் அனைவரும் வைத்திக்க வேண்டும் என்பதை  தெளிவு படுத்தி உரையாற்றினார்.

Exit mobile version