தென்னிலங்கையில் முகிழ்த்து வரும் பொதுமக்கள் போராட்டங்களுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு

தென்னிலங்கை பொதுமக்கள் போராட்டங்கள்

இன்று தெற்கில் போராடிக் கொண்டிருக்கும் பொது மக்கள், இளைஞர்களுக்கு எம் தோழமையைத் தெரிவிக்க விரும்புகின்றோம். உறுதியாகத் தெரிவிக்கின்றோம். ஆனால் நீங்கள் இன்று போராடப் புறப்பட்டதற்கான காரணங்களான பொருளாதார விடயங்கள் எம்மையும் தாக்குகின்றனவே. ஆனாலும், எம் தோள்களை உங்களுடன் இணைப்பதில் உள்ள மனத்தடைக்கான காரணம் தமிழர்களாகிய எம் மனதில் எழுந்து நிற்கும் அச்சமும், களைப்பும் தருகின்ற கேள்வியே.

ஒரு தேசமாக எமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தமிர்களின் நீண்டகாலக் கேள்விக்கு தங்களிடமாவது பதிலேதும் உண்டா? என தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வினவியுள்ளது.

அண்மைய நாட்களில் தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் பொதுமக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்ள விரும்பும் வகையில் தமிழ் சிவில் சமூக அமையத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இருந்து முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் இன்றைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு உண்மையான அடிப்படைக் காரணமான சிங்கள பௌத்த மேலாதிக்க அபிலாசைகளுக்கு மாற்றீடுகள் முன்வைக்கப்படவில்லை. வெறுமனே முன்மொழியப்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தமிழருக்கு எதையும் தந்துவிடப் பொவதில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் சிவில் சமூக அமையத்தின் இணைப்பேச்சாளர்களான அருட்தந்தை வீ.யோகேஸ்வரன் மற்றும் பொ.ந.சிங்கம் ஆகியோரால் ‘அண்மைய நாட்களில் தென்னிலங்கையில் முகிழ்த்து வரும் பொதுமக்கள் போராட்டங்களுக்கான ஆதரவைத் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது’ என்ற தலைப்பின் அடிப்படையில் 27 குறிப்புகளை உள்ளடக்கி இவ் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TCSF_Press_Release_20.04.2022__UNICORD_
Tamil News