கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்வி:

கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்விகொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்வி:              மட்டு.நகரான்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியைப் பற்றிச் சிந்திக்கின்ற, சிந்திக்கத் தவ றியவர்கள் எதிர் காலத்தில் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் இன்று தமிழர் தாயகப் பகுதியில் நடந்தேறி வருகின்றன.

தமிழர் தாயகப் பகுதியானது, கடந்த பல தசாப்த கால யுத்தம் மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டங்களின் காரணமாகப் பல்வேறு இழப்புகளையும், சரிவுகளையும் எதிர்கொண்டு வருகின்ற போதிலும் பொருளாதாரம், கல்வி போன்ற விடயங்களில் ஓரளவு தனது நிலையினை முன்னேற்றி வந்தாலும், அண்மைக் காலமாகக் தமிழ் மாணவர்களின் கல்வி நிலையானது வீழ்ச்சியடைந்து செல்வதாக கல்வியியலாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

எட்டாக்கனியாகியுள்ள இணையவழிக் கற்கை

கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்விஇன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சு றுத்தல் காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கல்வி நிலையா னது, வீழ்ச்சி நிலையில் இருப்பதாக கல்விப் புலம் சார்ந்தவர்களினால் கவலை தெரி விக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமையினைத் தாண்டி, தமிழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை முன் கொண்டு செல்வதற்கான எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை யென்பதே கவ லைக்குரிய விடய மாகவுள்ளது.

இன்று இலங்கையில் இணையவழிக் கற்கை செயற்பாடுகள் முன்னெடுக்கப் படு கின்ற போதிலும், அந்தச் செயற்பாடுகளினால் தமிழர் பகுதியில் உள்ள மாணவர்கள் எந்தளவுக்கு நன்மை அடைகின்றார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

குறிப்பாகத் தென்னிலங்கையில் இணையவழி கற்கைகளுக்கு சிங்கள மாணவர்க ளைத் தயார்ப்படுத்துவதில் காட்டப்படும் ஆர்வம், தமிழ் மாணவர்களைத் தயார்ப்படு த்துவதில் காட்டப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதே போன்று வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வி, இணையவழிக் கற்கை செயற்பாடுகள் என்பது அனைத்து வசதிகளையும் கொண்ட மாணவர்களுக்கே பொரு த்தமான விடயமாகப் பார்க்கப் படுகிறது. அன்றாடம் கூலித் தொழில் செய்து தமது குடும்பத்தினையும் பராமரித்து, தமது பிள் ளைகளைக் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் பெற்றோரால் அது சாத்தியப்ப டுமா என்பது கேள்விக் குறியாகும்.

இன்று வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வி பல பகுதிகளில் இணைய வசதிக ளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த இணையவழிக் கற்கையினை இப்பிரதேச ங்களில் வாழும் மாணவர்கள் எவ்வாறு மேற்கொள்ளப் போகின்றார்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரைப் பிரதேசத்து மாணவர்கள் இந்த இணை யவழிக் கற்பித்தல் செயற்பாடுகளினைத் தடையின்றி முன்னெடுக்கும் அதே வேளை யில், படுவான் கரைப் பகுதி மாணவர்களோ இந்தக் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடு பட முடியாத நிலையில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

“தற்போதைய இணையவழிக் கற்கை நடவடிக்கையினை அனைவரும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக மாற்றியமைத்துக் கொண்டு செல்வதாயின், இதனை சில மாற்றங்களோடு, சில வேறு பட்ட முறைகளிலும் நடத்திச் செல்லலாம். தனவந்தர்கள், செல்வந்தர்கள், வறுமை நிலையிலுள்ள கல்வி கற்கும் பிள்ளைகளையு டைய குடும்பங்களுக்கு ஒரு திறன்பே சியை வாங்கிக் கொடுக்கலாம். பொதுவான கணினி வள நிலையங்களை உருவா க்கி, அதிலே மாணவர்களைச் சிறுச்சிறு குழுக்க ளாக உருவாக்கி, அதனூடாக மாணவ ர்களின் கற்றலை முன்னெடுத்துச் செல்லலாம், இவ் வாறு சில வழிமுறைகளை ஏற்படு த்துவதன் மூலம், தடைப் பட்டிருக்கின்ற கல்வியை ஒரளவுக்கேனும் முன்கொண்டு செல்லலாம். எனவே, இவ்விடயங்களைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்களின் நலன் கருதிச் செயற்பட முன்வர வேண்டும்”

அதற்கும் மேலாக இந்த கற்பித்தல் செயற்பாடுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் மிக வும் மந்த கதியிலேயே இடம் பெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு கணிப்பீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், தாங்கள் கற்பிக்கி ன்றோம் என்பதைக் காட்டுவதற்காகவும் சிலர் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெ டுத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களின் இந்த இணையவழிக் கற்கையைப் பெறமுடியா மல் பின்தங்கிய நிலையில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் எதிர் கொள்ளும் விடயங்கள் கவலைக்கு உரியதாக இருக்கி ன்றன. அதிலும் பல பகுதிகளில் இணைய த்திற்குரிய அலைய இணைவு இல்லாமை மாணவர்களுக்கு பெரும் சிரமத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில், யுத்தம், இயற்கைச் சீற்றம், இன முரண்பாடுகள் எனத் தொடர்ச்சியாகப் பாதிப்புகளை இம் மாகாணம் எதிர்கொண்டு வரும் சூழமைவில், கல்வி நிலையிலும் இங்கேயுள்ள மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். கல்வி நிலை தற்போது ஓரளவு சீராகி வந்த நிலையில், கொரோனாப் பெருந் தொற்றுப் பாரிய தாக்கத்தினைத் தமிழ் மாணவர்களின் கல்வி நிலையில் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பான கருத்துப் பகிர்வுகள்

கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்விஇந்த நிலைமைகள் குறித்து நாங்கள் பின்தங் கிய சில பகுதிகளில் உள்ள மாணவர்களிட மும் கருத்துகளைப் பதிவு செய்த போது அவர் கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

“நான் 9 ஆம் ஆண்டில் கல்வி கற்கின்றேன். Zoom, WhatsApp ஆகியவற்றின் மூலம் இணையவழிக் கற்கை வகுப்புகள் நடை பெறுகின்றன. ஆனாலும் ஆசிரியர்கள் அனு ப்பும்  பாடக் குறிப்புக்களைப் பார் ப்பதற்குக் கூட அலைபேசிகளுக்கு முறையாக  இணைய வசதிகள்  கிடைப்பதில்லை. எமது கிராமத்தில் கல்வியில் ஆற்றலுள்ள மாணவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால், இணைய வசதிகள் இல்லாததால்,  பாடங்களைச் சரியாகக் கற்க முடியவில்லை.   ஆசிரியர்கள் அனுப்பும் பாடங்கள் கூட எமக்குக் கிடைப்பது கடினமாக உள்ளது. இதற்கு அரசாங்கம் எமது பகுதியில் அலை பேசிகளுக்கு,  இணைய வசதியை ஏற்படு த்திக் கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மட்டக்களப்பு மாவட் டத்தின் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி முன்மாரியில் உள்ள பாடசாலையில் சாதாரண தரம் பயிலும் ஒரு மாணவன் தெரிவித்தார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றையவை  (அதிகாரம்:கல்வி, குறள் எண்:400)

அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்வியே. கல்வியைத் தவிர்ந்த மற்றைய பொன், பொருள், மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகாது என்பது இக்குறளின் பொருளாகும்.

இவ்வாறான கல்வியை, மாணவர்களுக்கு சிறு பராயத்திலிருந்து வழங்கத் தவற விடு வோமாக இருந்தால், அது நாம் ஒவ்வொருவரும் சமூகத்திற்குச் செய்யும் பாரிய துரோ கம் ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதிக்குட்பட்ட போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் எல்லைப் புறங்களிலுள்ள கிராமங்களில் சாதாரண அலைபேசி அழைப் புகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் இணையவழிக் கற்கை எவ்வாறு மேற் கொண்டு செல்வது என அப்பகுதி மாணவர்களும், பெற்றோரும் அங்கலாய்க் கின்ற னர்.

“எனக்கு 2 பெண் பிள்ளைகள். பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள். எனது கணவ ரும் சுகவீன முற்றிருக்கின்றார். எமது பிள்ளைகள் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வி கற்பதற்கு   அலைபேசி இல்லை. எமக்கு உதவுவதற்கு யாருமில்லை” என அப்ப குதியைச் சேர்ந்த பெண் ஒருவர்   தெரிவித்தார்.

இந்த விடயங்களை நாங்கள் சாதாரணமான விடயங்கள் என்று கருதிக் கடந்து செல்ல முடியாது. இது ஒரு சமூகத்தின் கல்வி தொடர்பான விடயம். அதனை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் கல்விச் சமூகத்திற்கு உள்ளது. இன்று இவர்கள் எதிர் கொள்ளும் சிக்கலான நிலைமை எதிர்காலத்தில் வடக்கு கிழக்கின் கல்வி நிலையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலைமை யினை நாங்கள் கடந்துசெல்ல வேண்டுமானால், இவற்றைச் சீர் செய்வதற்கான சரி யான திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்கின் றது.

எனக்கு 2 பெண் பிள்ளைகள். பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள். எனது கணவரும் சுகவீன முற்றிருக்கின்றார். எமது பிள்ளைகள் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வி கற்பதற்கு   அலைபேசி இல்லை. எமக்கு உதவுவதற்கு யாருமில்லை

கடந்த காலத்தில் தமிழர்களின் எல்லைப்புறக் கிராமங்களில் மிகவும் திறமையான மாணவர்கள் உள்ளார்கள் என்பதை கடந்த முறை கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் A சித்தி பெற்ற மாணவர்களும், கல்வி பொதுத்தர உயர் தரத்தில் சித்தி பெற்று மருத்துவ, பொறியியலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளுக் குச் சென்ற மாணவர்களும் வெளிப்படுத்தியிருந்தனர்.

எல்லைப் பகுதியில் மாணவர்கள் மத்தியில் கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த கல்வி மீதான ஆர்வம், இன்று இல்லாமல் சென்று விடுமோ என்ற அச்சமும் பலர் மத்தியில் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், இன்றைய நிலைமையினைத் தமிழ் மக்கள் எந்த முறையில் எதிர் கொள்ள முடியும் என மட்டக்களப்பின் பின்தங்கிய பகுதிகளைக் கொண்ட கல்வி வலயமாகவுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்வி அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது,

வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வி, “தற்போதைய இணையவழிக் கற்கை நடவடிக்கையினை அனைவரும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக மாற்றியமைத்துக் கொண்டு செல்வதாயின், இதனை சில மாற்றங்களோடு, சில வேறு பட்ட முறைக ளிலும் நடத்திச் செல்லலாம்.

கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்விதனவந்தர்கள், செல்வந்தர்கள், வறுமை நிலையிலுள்ள கல்வி கற்கும் பிள்ளைகளையு டைய குடும்பங்களுக்கு ஒரு திறன்பேசியை வாங்கிக் கொடுக்கலாம். பொதுவான கணினி வள நிலையங்களை உருவாக்கி, அதிலே மாணவர்களைச் சிறுச்சிறு குழுக்க ளாக உருவாக்கி, அதனூடாக மாணவர்களின் கற்றலை முன்னெடுத்துச் செல்லலாம், இவ் வாறு சில வழிமுறைகளை ஏற்படுத்துவதன் மூலம், தடைப் பட்டிருக்கின்ற கல்வியை ஒரளவுக்கேனும் முன்கொண்டு செல்லலாம். எனவே, இவ்விடயங்களைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்களின் நலன் கருதிச் செயற்பட முன்வர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இன்று  தமிழர் பகுதிகளை பாதுகாக்கும் எல்லைக் காவலர்களாக உள்ள தமிழ் மக்களை அங்கிருந்து இடம் பெயரச் செய்யும் நிலைக்கும் இன்றைய நிலைமை கொண்டு வந்துள்ளது. இது எதிர் காலத்தில் தமிழர் தாயகப் பகுதியை பாதுகாப்பதும் கேள்விக் குறியாக சென்று விடும்.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் பகுதிகளையும் பாதுகாத்து, வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வி நிலையினையும் மேம்படுத்துவதற்கான செயற்பாடு களை முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இன்று தமிழர் மத்தியில் உள்ள கல்வி யியலாளர்களுக்கு உள்ளது.

இதை அவர்கள் செய்யத் தவறும் பட்சத்தில், தமிழ் மாணவர்களின் கல்வி எதிர் காலத் தில் பாரிய வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாகி விடும்.

ilakku-weekly-epaper-140-july-25-2021