இலங்கைக்கான கடனை விரைவுபடுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை- IMF பிரதானி ஜோர்ஜிவா தெரிவிப்பு

இலங்கைக்கான கடன் உதவியை விரைவுபடுத்துவதற்கான தேவை தொடர்பில் சீனாவுடன் பயனுள்ள பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, தனியார்துறை கடன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளடங்கும். இறையான்மை கடன் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு சீன அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்றுள்ள சீன அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டங்களின் பின்னர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகள் முகங்கொடுத்து வரும் முக்கிய கடன் நெருக்கடிகளுடன் செயற்படுவதற்கான எதிர்பார்ப்பு தொடர்பில் தமக்கு சிறந்த உணர்வு உள்ளதாகவும் அவர் அந்தக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார். அத்துடன் கடன் நெருக்கடி தொடர்பில் சிறந்த முறைப்படி தலையீடு செய்வதற்கு சிறந்த சந்தர்ப்பமொன்றுக்கான வாய்ப்பு உள்ளதாக சீனாவிற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது வரையறையின் கீழ் கடன் மறுசீரமைப்பை விரைவுபடுத்துவது மற்றும் மத்தியதர வருமானம் பெறும் நாடுகளை உள்ளடக்கும் வகையில் அதனை விரிவுபடுத்துவதற்காக மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் வேண்டுகோளின் பின்னர் அந்தக் கூட்டத்தின் இடைநடுவில் கடன் நெருக்கடி தொடர்பில் சீன தலைவர்கள் மத்தியில் சிறந்த நடுநிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் மற்றும் ஏனைய மேற்கத்தைய அதிகாரிகள் G-20 வரைவின் கீழ் கடன் வழங்கும்போது தற்போது உலகில் பாரிய சுவைறி கடன் உரிமையாளர்களான சீனாவின் மூலம் அவர்கள் நோக்கும் கோணம் தொடர்பில் நிலவும் சிக்கல்களையும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

உலக வங்கி, IMF மற்றும் G-20 தலைமைத்துவ சம இணைப்பாளர்களான பிரதான கடன் உரிமையாளர்கள், சில கடன் பெறுவோர், தனியார் துறை – உயர்மட்ட உலகளாவிய இறையான்மை கடன் வட்டமேசை உருவாக்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வட்டமேசை மூலம் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் மற்றும் கட்டமைப்பு கடன் நெருக்கடியை விலக்கிக்கொள்வதற்கும் வியூகமொன்றை முன்வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.