Home உலகச் செய்திகள் கை, கால் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்-தலிபான் அறிவிப்பு

கை, கால் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்-தலிபான் அறிவிப்பு

கடுமையான தண்டனைகள் தொடரும்கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என  தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி  தெரிவித்துள்ளார்.

முல்லா நூருதீன் துராபி, தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர். இவர் அண்மையில் ஏபி செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களை துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த துராபி, “நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டத்திட்டங்களை வகுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version