Home உலகச் செய்திகள் தலிபான் தாக்குதல்: தப்பிச்செல்லும் ஏதிலிகள் – அயல் நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

தலிபான் தாக்குதல்: தப்பிச்செல்லும் ஏதிலிகள் – அயல் நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

37242170 303 தலிபான் தாக்குதல்: தப்பிச்செல்லும் ஏதிலிகள் - அயல் நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

உலகெங்கும் 26 இலட்சம் ஆப்கானிஸ்தான்  ஏதிலிகள் உள்ளனர் என்றும் அதில் பதிவு செய்யப்பட்ட ஏதிலிகளில் 86 சதவீதமானோர் ஆப்கானிஸ்தானுக்கு அருகாமையில் உள்ள  நாடுகளிலும்   மேலும் 12 சதவீதமானோர் ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர் என Aljazeera செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், “ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிவேகமாக முன்னேறி வருவதால் அவர்களுடைய தாக்குதலுக்குப் பயந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் ஏதிலிகளை அனுமதிக்கும் வகையில் தங்கள் எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும்” என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் “உள்நாட்டிலேயே இடம் பெயர்கிறவர்கள், தலைநகர் காபூல்தான் பாதுகாப்பான இடம் என்று கருதி அங்கே செல்கிறார்கள். உணவுப் பொருள் பற்றாக்குறை தீவிரமாக இருக்கின்றது” என  உலக உணவு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் மனிதாபிமான சிக்கல் குறித்தும் அந் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version