ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம்

ஐக்கிய நாடுகள் சபை

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐக்கிய நாடுகள் சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு  கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

இந்த குழுவில்  அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால் இக்குழு, வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்,  ஆப்கனில்  அமைத்துள்ள தலிபான் அரசை ஏற்பது குறித்து ஐ.நா இன்னமும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021