முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

ஈழத்தமிழர் வரலாற்றில் ஆறுமுகநாவலர் அவர்கள் பண்பாட்டு மீட்டுணர்வு மூலம் பிரித்தானிய காலனித்துவத்திற்கும் கிறிஸ்தவ மேலாண்மைக்கும் எதிராகப் பேராடுவதற்கான மக்கள் சத்தியை ஒன்று திரட்டினார். ஆயினும் நாவலர் அறிமுகம் செய்த ஈழத்தமிழ்ப் பண்பாடு என்பது ஆகமநிலைப்பட்ட சைவப்பண்பாடாக அதாவது சாதியத்தை ஏற்ற வைதீகச் சிவவழிபாட்டுப் பின்னணியலான ஈழத்தமிழ்ப் பண்பாடாகவே முன்வைக்கப்பட்டது.

அத்துடன் நாவலர் மனுக்கொடுத்து பிரித்தானியக் காலனித்துவத்துடன் தேவைகளையும் உரிமைகளையும் பெறும் அரசியல் தந்திரோபாயத்தை முன்வைத்தாரே அல்லாது ஈழத்தமிழ்த் தேசியம் என்பது மக்கள் தாமே நிறுவிக்கொள்ள வேண்டிய அவர்களின் பிறப்புரிமை,மக்கள் உரிமை, இன்னும் சிறப்பாகச் சொல்வதாக இருந்தால் ஆறுமுக நாவலர் ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட ”இறைமை உடைய மக்கள்” (Sovereign People) என்ற உண்மை வெளிப்படுத்தப்படாது சைவர்கள் என்ற மத அடையாளத்தின் மூலம் மதம்சார் தேசியத்தை முன்னெடுத்தமை வரலாறு.

இதற்கான காரணங்களாக சாதிய உணர்வில் சமத்துவமற்ற உயர்ந்த சாதியினரே அதிலும் சிறப்பாக வெள்ளாளரே ஆட்சிக்குரியவர் என்ற மனநிலையில் நாவலர் செயற்பட்டமையால் அவரால் சாதியற்ற பிரதேச வேறுபாடற்ற மொழி வழித் தேசியத்தை அவரால் உருவாக்க முடியவில்லை.

அத்துடன் ஆங்கிலம் படித்த புலமையாளராக நாவலர் விளங்கியமையால் சொத்துடைமையுள்ள ஆங்கிலம் கற்றோர் குழாத்தின் சனநாயகத்தையே அவரால் முதன்மைப்படுத்த முடிந்தது.

இதனாலேயே சிங்களவர்களுள் சொத்துடைமையுள்ள ஆங்கிலம் கற்ற குழாத்தினருடன் இணைப்பை ஏற்படுத்தி, பிரித்தானிய காலனித்துவம் “சிலோனிஸ்” என்ற ஆங்கிலப் பெயரில் உருவாக்க முயன்ற “இலங்கை”த் தேசியத்தினை ஆதரித்து, பிரித்தானிய காலனித்துவ அரசால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட “கொழும்பு” என்னும் தலைநகரை மையப்படுத்தி வாழ்ந்த சொத்துடைமை உள்ள உயர்சாதி ஆங்கிலப்புலமைத் தமிழர்களையே ஆறுமுகநாவலர்; தமிழ்த் தலைவர்களாக அல்ல செயற்கைத் தேசியமாகப் பிரித்தானிய காலனித்துவ அரசால் முன்வைக்கப்பட்ட இலங்கைத் தலைவர்களாக கொழும்புவாழ் தமிழ் மேட்டுக்குடியினரை வெளிப்படுத்த முனைந்தார்.

இதனை ஆறுமுகநாவலர் சொத்துடைமையுள்ள ஆங்கிலம் கற்றோர் குழாத்து தமிழராக சட்டநிரூபண சபையில் தமிழர் பிரதிநிதியாகத் திகழந்த சேர் முத்துக்குமாரசுவாமியின் மறைவினை அடுத்து அவரின் மருகனான சேர் பொன்னம்பலம் இராமநாதனை 22.05.1879 யாழ்ப்பாணம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்திலே இலங்கைச் சட்டநிரூபண சபையின் வேட்பாளராக மக்களுக்கு அறிமுகம் செய்த பொழுது நிகழ்த்திய பின்வரும் உரையில் தெளிவாகக் காணலாம்.navalar முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

“நமக்கு முன்பு இன்றுள்ள கடமை தகைசான்ற இந்தப் பெருமகனின் (சேர் முத்துக்குமாரசுவாமியின்) இடத்திற்கு தகுதி வாய்ந்தவர் ஒருவர் யார் என்று காண்பதே. சட்டசபையிலே எமது பிரதிநிதியாக அமர்பவர் தமிழராயிருத்தல் வேண்டும்.” என்று ஆறுமுகநாவலர் தொடங்கிய காரணத்தால் அவரை தமிழ்த்தேசியத்தின் தந்தை என்றனர்.

ஆனால் அவர் அந்தத் தமிழர் என்பவர் உயர்குடி உயர்கல்வி உடையவராக இருத்தல் வேண்டும். என்கிற நிபந்தனையை பின்வரும் கூற்றுக்களால் எடுத்து விளக்குகின்றார்.

“அவர் சிறந்த கல்விமானாய் விளங்க வேண்டும். உயர்ந்த கொள்கை உடையவராக இருத்தல் வேண்டும். நல்ல செல்வ வசதி பெற்றிருத்தல் வேண்டும். உயர்ந்த சமுகத்திலே பழகக்கூடிய நல்வாய்ப்பு உடையவராதல் வேண்டும். தமது கருத்துகளிற் சுதந்திரராயும் எந்த சூழலிலும் எவ்வித அச்சமுமின்றி அக்கருத்துக்களை வெளியிட வல்லவராயுமிருத்தல் வேண்டும்.

இவை யாவிலும் மேலாக அவர் ஆள்வோரதும் ஆளப்படுவோரதும் மதிப்பிற்குரியவராதல் இன்றியமையாதது. பெரியோர்களே, பொறுமையோடு ஆராய்ந்தால் மேற்கூறிய பண்புகள் யாவும் பொருந்தியவர் பொன்னம்பல முதலியார் இராமநாதன் அவர்கள் என்பதில் ஐயத்திற்கு இடமேயில்லை. …. இங்குள்ளவர்களில் எவரும் திரு நம்பிக்கையற்றவராய் இரார் என்பது என் நம்பிக்கை. எனவே பின்வரும் பிரேரணையை உங்கள் முன்சமர்ப்பிக்கின்றேன்.

தமிழ் இனத்தின் தலையாய உறுப்பினர்களாகிய நாம் திரு. பொன்னம்பலம் முதலியார் இராமநாதன், எமது பிரதிநிதியாய் அமர்வதற்கான எல்லாத் தகுதிகளும் வாய்ந்தவர் என்று ஏகமனதாகத் தீர்மானிக்கின்றோம். சமூகத்தின் உயர் அந்தஸ்தில் விளங்குபவரும் சுதந்திரமான வருவாயை உடையவருமான இவரே எல்லா வகையிலும் தகுதி வாய்ந்த வேட்பாளர் என்று இந்த கூட்ட உறுப்பினர் யாவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.” என்பது நாவலரின் அந்தப் பேச்சாக உள்ளது.

நாவலரின் இந்தப்பேச்சு எவ்வாறு தமிழர்களிடை சாதிய உணர்வும் சொத்துரிமையும் உள்ளவரும் எந்த மொழி ஆட்சியாளர்களை மகிழ்விக்கக் கூடியதோ அந்த மொழியில் புலமையுடையவராயும் ஆளப்பவோரின் ஆதரவைப் பெறக் கூடியவராகவும் உள்ள ஒருவரைத் தமிழர்கள் தங்கள் பிரநிதியாக அனுப்பி வைக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டனர் என்பது தெளிவாக்குகிறது.

பிளெகானவ் என்னும் இரசிய சமுகவியல் அறிஞர் ஒவ்வொரு குறிப்பிட்ட காலப் பகுதியிலும் சமுதாயத்தின் ஸ்தாபன வடிவம்தான், திறனுள்ள அல்லது திறனற்ற தனிநபர்களின் பாத்திரத்தையும் அதன் விளைவாக அவர்களின் சமுதாய முக்கியத்துவத்தையும் நிர்ணயிக்கிறது” என்பதற்கு ஏற்ப அக்காலத்தில் மேலாண்மை பெற்றிருந்த சைவவேளாள நிறுவனம் ஈழத்தமிழரின் தலைமையை ஏற்றுக் கொண்டமையை நாவலரின் மேற் கூறிய பேச்சு எடுத்து விளக்குகிறது.

நாவலருடைய மறைவுக்கு மூன்று ஆண்டுகளின் பின்னர்; படுவான்கரை தொடுவான் கரைக்கு இடப்பட்ட தொடர்ச்சியான மட்டக்களப்புக்களால்; நீர்வளம் பெற்ற விவசாய நிலமாகிய மட்டக்களப்பில்  உள்ள காரைதீவில் மயில்வாகனம் சாமித்தம்பி என்னும் இயற்பெயருடைய விபுலாநந்தர் தோன்றினார்.

இவருடைய வாழ்வியல் காலமாகிய 27.03.1892 முதல் 19.07.1947 வரையான 55 ஆண்டுகள் பிரித்தானிய காலனித்து ஆட்சியில் இலங்கைத் தீவு முழுமையாக இருந்த காலம். வாக்குரிமை 1910இல் மட்டுப்படுத்தப்பட்ட சொத்துரிமையுள்ள ஆங்கிலம் படித்தோர் தங்களுக்கான பிரதிநிதியை “சிலோன்” தேசியத்தில்,அதாவது தமிழர் சிங்களவர் என்ற தேசியத்தன்மை கவனத்தில் எடுக்கப்படாது பிரித்தானிய காலனித்துவம் செயற்கையாக உருவாக்கிய அவர்களால் உருவாக்கப்பட்ட தலைநகரமாகிய கொழும்பை மையமாக வைத்து உருவாக்கிய செயற்கை தேசியத்தின் அடிப்படையில் அறிமுகமாகிய பொழுது, மயில்வாகனத்திற்கு 18 வயதாக இருந்து உள்ளது.t முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

எனவே மயில்வாகனம் என்னும் இளைஞனின் அடுத்த பத்தாண்டு உருவாக்கமும் மட்டக்களப்பில் தமிழ்ப்பள்ளியில் தமிழ்வழி படிப்பைத் தொடங்கி பின்னர் கல்முனை மெதடிஸ் பள்ளியிலும் ,புனித மிக்கேல் கல்லரியிலும் தொடர்ந்து படித்து கொழும், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு உயர்கல்விக்காகச் சென்றார்.

மட்டக்களப்பின் புனித மிக்கேல் கல்லூரியில் உதவியாசிரியராகவும் யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் இலண்டனின் விஞ்ஞானப்பட்டதாரியாகி விஞ்ஞான ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவங்கள் கிறிஸ்தவ கலாச்சார ஆங்கில ஐரோப்பியவாக்கச் சூழலுக்குள் அவரை வாழவைத்தன.

ஆயினும் மட்டக்களப்பின் காரைதீவின் தமிழுணர்வால் மற்றவர்கள் போல் ஆங்கில மோகத்திலும் பதவியாசைகளிலும் புகழிலும் மயங்கிடாது யாழ் சம்பத்திரிசிரியார் கல்லூரிக்குச் சமீபமாகக் கொழும்புத்துறையில் வாழ்ந்த யோகர் சுவாமிகளின் ஈர்ப்புக்கு ஆளானார்.

தொடர்ந்து மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராக 1920 இல் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் தன் சைவசமய தமிழ்ப்பணியினை தொடங்கிய மயில்வாகனம் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினை நிறுவி ஆங்கிலத்தை மட்டும் படித்த மக்களிடை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

1923ல் மன்னிங் சீர்திருத்தத்தின் மூலம் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட பொழுது அதிபர் மயில்வாகனன் தமிழ்த் தேசியத்திற்காகவும் தமிழர்கள் முஸ்லீம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன்களுக்காகவும் போராடும் உறுதியான ஆற்றலாகப் படிப்படியாக எழுச்சி பெறத் தொடங்கினார்.

யாழ்ப்பாண சைவவேளாள மேலாதிக்கத்தின் தன்மைகளை உணர்ந்தவராக இருந்த மயில்வாகனம் கொழும்பில் சிவாந்தாவிடம் உபதேசம் பெற்று,இராமகிருஸ்ண மடத்தின் துறவியாவதற்காகத் தமிழகம் சென்றார். 1924 சித்திரைப் பௌர்ணமியில் வடமொழியில் பிரபோத சைதன்யர் என்ற ஆன்மிகப் பெயரையும் தமிழில் விபுலாநந்தர் என்ற ஆன்மிகப் பெயரையும் கொண்டவராய் துறவியாகினார்.vupulananthar 1 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

இக்காலகட்டத்தில் ஞானியார் அடிளுடனான பழக்கம் சைவசித்தாந்தத்தைப் போற்றுபவராகவும்,கரந்தைச் தமிழ்ச் சங்கத்துடனான பழக்கம் தமிழ் பேரறிஞராகவும் தில்லை திருவேட்களத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடியாகத் தானே சேவையாற்றியமை அவரைச் சாதியம் கடந்த மறைவல்லுநராகவும் அனுபவப்படுத்த தமிழுக்காகப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டுமென ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியாரிடம் வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்கச் செய்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதற் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியேற்றார். 1933இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தனது அறையில் அடிகள் பிரித்தானிய காலனித்துவ அடிமைத்தனத்தை எதிர்த்து காங்கிரஸ் கொடியைப் பறக்கவிட்டு விடுதலை உணர்வை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் தேர்வாளராக மட்டுமல்லாது இராஜாஜி போன்ற மூதறிஞர்களே நீங்களே தமிழ் அறிவியல் சொற் கலைச்சொல்லாக்க அகராதிக்குத் தலைமை தாங்க வேண்டுமெனக் கேட்டதின் பெயரில் பெருமை மிகு அவ் அறிவியல் விஞ்ஞான சேவையினை அவர் முன்னெடுத்தார்.

ஆயினும் தமிழிசை தமிழர்களுடைய இசை எனச் சொன்ன காரணத்தினால் அக்காலத்தில் கர்நாடக இசையை முன்னெடுக்க ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகடெமியினை நிறுவிய பார்ப்பனியர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளான சூழலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பதவியைத் துறந்து இலங்கை திரும்பி பத்தாண்டுகளாக யாழ் இசையின் தொன்மையின் தன்மைகளைத் தெளிவிக்கும் பெரும் ஆராய்ச்சியில் பயணித்தார்.

1931இல் டொனமூர் அரசியலமைப்பு ஈழத்தமிழர்களை சிறுபான்மையினமாக புறம் தள்ளிய தேர்தலைப் புறக்கணித்து யாழ்ப்பாணக்காங்கிரசின் முதன்மை பேச்சாளாராக தன்னை வெளிப்படுத்தினார்.f 16 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

தமிழ்த்தேசியத்தைக் கல்வித்துறை வழியாக முதன்மைப்படுத்தி தமிழராசிரிய சங்கத்தை நிறுவியும் தமிழராசிரியர்களை வேட்டி சால்வை அணிந்து ஆங்கில ஆடையணிய அழைப்பு விடுத்தும் தமிழ்ப்பண்பாட்டையும் தமிழரின் தன்னாட்சியை விளக்கிப் பேசி தமிழரின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளையும் முன்னெடுக்கவைத்தவர் அடிகள்.

என்னுடைய தந்தையும் தாயும் அக்காலத்தில் மட்டக்களப்பில் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றி அடிகளுடன் உடனுழைத்தவர்கள் என்ற படியால் அடிகளின் தமிழ்த்தேசியத்தன்மை குறித்து என் சிறு வயது முதலே என் தாய் தந்தை வழி கதை கதையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டவன் நான்.

நல்ல செல்வ வசதியுடையவராய் மட்டக்களப்பு மண் 1948இல் அடிகளின் மறைவுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் உறங்கிக் கிடந்த வேளையில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து சுதந்திரதினத்தைப் புறக்கணித்தது என்றால் அது அடிகள் உருவாக்கிய கல்வியின் வெற்றி என்று கூறலாம்.

இலங்கைப் பல்கலைகழகம் 1943இல் இல் நிறுவப்பட்ட பொழுது அதன் முதல் தமிழ்ப்பேராசிரியராகவும் பணிப்பொறுப்பேற்று தனக்குப் பின் தமிழாசிரியப் பரம்பரை ஒன்று பேராசிரியர் கணபதிப்பிள்ளை பேராசிரியர் செல்வநாயகம் பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியர் சதாசிவம் என எழுந்து வரச் செய்ததினால் தான் அந்தப் பரம்பரையின் நீட்சியாகப் பேராசிரியர் கைலாசபதி பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசிரியர் வேலுப்பிள்ளை போன்ற பல பேராசிரியர்கள் உருவாக வழிசெய்தார். அந்தப் பேராசிரிய பரம்பரையின் எச்சமாக இன்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதனாலேயே முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தரை துறைசார் தமிழ்த்தேசியத்தின் தந்தை என ஈழத்தமிழியல் உலகம் போற்றுகின்றது. மட்டக்களப்பைச் சார்ந்த சுவாமிக்கு முத்தமிழ் வித்தகர் என்ற பட்டத்தை வழங்கி எழுந்து நின்று வணங்கியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள். இன்று யாழ்ப்பாண மட்டக்களப்பு பிரிவினைகள் குறித்துப் பேசும் அறிவலிகள் தென்தமிழீழ வடதமிழீழ ஒற்றுமையின் இறுக்கத்தை இந்நாட்களில் தெரிந்து கொள்ள விரும்பின் அடிகளின் வரலாற்றை அறிந்து கொள்தல் நலம் பயக்கும்.unnamed 4 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

அடிகள் எந்த அளவு தூரத்திற்கு முஸ்லீம் சகோதரர்களுடன் இணைந்து அவர்களில் ஒருவராக வாழ்ந்தார் என்பதைத் தென்தமிழீழத்து முஸ்லீம் சகோதரர்கள் இன்றளவும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

1945 -1947க்கு இடைப்பட்ட சோல்பரி அரசியல் சீர்திருத்தக் காலத்து அடிகளின் அறிவார்ந்த பணிகளும் எழுத்துக்களும் மீள்வாசிப்புக்கு உட்படுத்தபட்டால் இன்றையத் தமிழர்களுக்குக் கிழக்கின் தொன்மையும் வடக்கு கிழக்குடன் இணைந்து பயணித்த போக்குகளும் தெளிவாகும்.

20-21.06.1947  இல் அடிகளின் அயரா உழைப்பின் அரும்படைப்பாக கரந்தைத் தமிழ்ச்சங்கத்தினரின் ஆதரவில் திருக்கொளம்பூதூர்த் திருக்கோவிலில் யாழ்நூல் வெளியாகி தமிழினத்தின் தொன்மையையும் தொடர்ச்சியையும் உலகுக்கு இன்று வரை நிவைநிறுத்தி தமிழிசையின் தொன்மையை மட்டும் அல்ல தமிழினத்தின் “மக்கள்” என்ற தகுதியினையும் நிரூபித்து நிற்கிறது.

தமிழீத் தேச மக்களின் தென்தமிழீழ வடதமிழீழ ஒருங்கிணைப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறைமக்கும் இறக்கும் வரை உழைத்த முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளின் உயிராசை வடக்கு கிழக்கு இணைந்த தன்னாட்சி என்பதை இன்று ஒவ்வொரு தமிழர்களும் தாயகத்திலும் உலகிலும் மனதிருத்தி அதற்கு உழைப்பதே அடிகளுக்குத் தமிழர் என்ற வகையில் நாம் செய்யக் கூடிய ஒரே நினைவேந்தலாகும