விவசாயிகள் போராட்டத்திற்கு  ஆதரவு- உழவியந்திரத்தில் பாராளுமன்றம் சென்ற ராகுல் காந்தி

ad16673e d6c9 48b8 9f1c cc10029f6aa8 விவசாயிகள் போராட்டத்திற்கு  ஆதரவு- உழவியந்திரத்தில் பாராளுமன்றம் சென்ற ராகுல் காந்தி

இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, பாராளுமன்றம் நோக்கி இன்று  உழவியந்திரத்தை ஓட்டிச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

 இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

“விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள், அரசைப் பொறுத்தவரை தீவிரவாதிகள். ஆனால், உண்மையில் இந்த சட்டங்கள் ஒன்று இரண்டு கார்பரேட் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே உள்ளன.

“வீதியில் இறங்கி மாதக் கணக்கில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவே தமது வீட்டில் இருந்து பாராளுமன்றம் நோக்கி tractor -ரை ஓட்டி வந்தேன்” என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை இன்று வரையில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ilakku-weekly-epaper-140-july-25-2021