Tamil News
Home செய்திகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இலங்கை2.9 மில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்ற பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை நாட்டின் 22 மில்லியன் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் முதல் கொள்கை வகுப்பாளர்கள் டொலர் தட்டுப்பாடு பணவீக்கம் அதிகரிப்பு உட்பட பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியா சர்வதேச நாணயநிதியத்திற்கு எழுதியுள்ளது என  தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இந்திய நிதியமைச்சின் பேச்சாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்,இலங்கை நிதியமைச்சை சேர்ந்தவர் கருத்து கூறுமாறு  விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

இலங்கையின் மிகமோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கைக்கு அவசியமாக உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதிஉதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதற்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா சீனாவின் ஆதரவு அவசியம்.

நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் நாங்கள் சீனா இந்தியாவின் இணக்கப்பாட்டினை பெறவேண்டும்,இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன இதுவரை இவை வெற்றியளித்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடன்களை வழங்கவேண்டியுள்ளது இது கடன் மறுசீரமைப்பின் கீழ் வரும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூலைக்குள் இலங்கைக்கு துரித உதவியாக 4 பில்லியன் டொலர்களை வழங்கியது.

Exit mobile version