Home செய்திகள் இராணுவ ஆட்சியை நீக்க கோரும் போராட்டக்காரர்கள் மீது சூடான் பாதுகாப்புப் படை தாக்குதல்

இராணுவ ஆட்சியை நீக்க கோரும் போராட்டக்காரர்கள் மீது சூடான் பாதுகாப்புப் படை தாக்குதல்

சூடானின் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல்

சூடான் தலைநகர் கார்தூமில், ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது சூடானின் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த மாதம் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து, இரு நாட்கள் திட்டமிடப்பட்ட மக்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் (நவம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் நடந்தது.

சூடானில் நிலவும் பிரச்சனையைத் தீர்க்க, அரபு லீக் மத்தியஸ்தர்கள் கார்தூம் நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர், அதற்கிடையிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் பங்கெடுத்த ஒரு போராட்டம் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள், இராணுவ ஆட்சி பின்வாங்கப்பட்டு, அமைதியான முறையில் குடிமை ஆட்சி அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exit mobile version