சூடான் அரசின் தலைவர்கள் கைது

சூடான் அரசின் தலைவர்கள் கைது

சூடான் நாட்டின் இடைக்கால அரசைச் சார்ந்த பல உறுப்பினர்களும், குடிமை அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முயல்கிறது என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

திங்கட்கிழமை அதிகாலை, அடையாளம் தெரியா இராணுவத்தினர், பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கையும், குறைந்தபட்சம் நான்கு அமைச்சர்களையும் கைது செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சூடான் அரசின் தலைவர்கள் கைது குறித்து, இராணுவத்தினர் கருத்து கூறாத நிலையில், ஜனநாயக ஆட்சிக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டில் நீண்டகாலமாக ஆட்சிபுரிந்த ஒமர்-அல்-பஷீரின் ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட பின்னர், இராணுவத்தினருக்கும் குடிமை அரசின் தலைவர்களுக்கும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், தலைவர்களின் கைதுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகரம் முழுவதும் இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி  வெளியிட்டுள்ளது.

நன்றி பிபிசி

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad சூடான் அரசின் தலைவர்கள் கைது