கொரோனா தனிமைப்படுத்தலில் சாதித்த மாணவன்

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப் பகுதியில் இணையக் கல்வி முறை பயன் படுத்தப்பட்டு வருவதனால் பெரும்பாலான மாணவர்கள்  தொலைபேசி களையும், இணையங் களையும்  அதிகமாக பயன் படுத்துகின்றார்கள்.

இதன் காரணமாக மாணவர்கள் சிறு வயதிலேயே  தவறான செயலுக்கு உட்பட்டு தவறான வழிக்கு செல்கின்றார்கள் என்ற குற்றச் சாட்டும் உள்ளது.

இந்நிலையில் இணையத் தளத்தினை அதிகமாக பயன் படுத்துவதனால் வாழ்க்கையில் சாதித்தும் காட்டலாம் என புதிய தொடர் பாடல் செயலி ஒன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நக்கீரன் மகிழினியன் என்ற மாணவன் உருவாக்கி உள்ளார்.

அந்த வகையில்  குறித்த மாணவன் உருவாக்கிய msquad என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு செயலியாக தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

IMG 20210710 074305 கொரோனா தனிமைப்படுத்தலில் சாதித்த மாணவன்

குறித்த மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட உரையாடலில்,

கேள்வி: தங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றினை கூறமுடியுமா?

பதில்: எனது பெயர் நக்கீரன் மகிழினியன் நான்  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், தரம் பத்தில்  கல்வி கற்கின்றேன். சிறு வயதில் இருந்தே மென் பொறியியலாளராக வர வேண்டும் என்பது என் இலக்கு.

புதிய வகை  தொடர்பாடல் செயலி ஒன்றை உருவாக்கி அதற்கு msquad என பெயர் சூட்டியுள்ளேன்.

கேள்வி: நீங்கள் இத்தொடர்பாடல் செயலியை உருவாக்கியதன் நோக்கம்?

பதில்: உறவினர்கள், நண்பர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும். Play storeல் எனது appஐ  பதிவு செய்து வைக்கவுமே இதனை உருவாக்கியுள்ளேன்.

கேள்வி: இந்த கண்டு பிடிப்பு உங்கள் தனிபட்ட முயற்சியா?  அல்லது யாராவது உதவினார்களா?

பதில்: எனது குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு,  எனது வீடு தனிமைப் படுத்தப் பட்டிருந்த சூழலில், அக்காலத்தை பயனுள்ள வகையில் மாற்றும் நோக்கோடு  கூகுளின்  உதவியுடன் தேடியே இச் செயலியை நான் எனது சொந்த முயற்சியில் உருவாக்கினேன்.

கேள்வி: Viber, Whats App  செயலியினை விட நீங்கள் கண்டு பிடித்த செயலி வினைத் திறன் கூடியது என சொல்கிறார்கள். அப்படியானால் இந்த செயலி எத்தகைய வினைத் திறன்  தன்மைகளை  கொண்டிருக்கின்றது?

பதில்: உறவுகளுடன் இச்செயலி ஊடாக உரையாடிய போது வீடியோக்கள் துல்லியமாகவும், உரையாடல் தெளிவாகவும் இருந்ததை நான் அவதானித்தேன்.  மிகத் துல்லியமான முறையில் படங்கள், காணொளிகள் மற்றும் தரவுகளை இதனூடாக  பகிர்ந்து கொள்ள முடியும். இந்த செயலி மிகவும் அதி விரைவு தன்மை கொண்டது.

கேள்வி: புதிய செயலி உருவாக்கி அது வெற்றி அளித்துள்ளது. இதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: குறித்த மென் பொருளை இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொண்டுள்ளார்கள்.  மேலும் இச்  செயலியை உருவாக்கியமைக்காக பல தரப்பினரும், எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிலர் விமர்சனங் களையும் முன் வைத்தனர். விமர்சனங்கள் மூலம் மேலும் இச்செயலியை மேம்படுத்த வேண்டும் என்பதை உணர்வ தோடு, அதற்கான செயற் பாட்டிலும் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 கொரோனா தனிமைப்படுத்தலில் சாதித்த மாணவன்