இலங்கையின் பிரபல பெருநிறுவனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் தீர்வுகள் முன்வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
இலங்கையின் பிரபல பெரும்நிறுவனங்கள் தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
சில நிறுவனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளன. சில நிறுவனங்கள் அரசியல் சமூக பொருளாதார ஸ்திரதன்மை அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கடும் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளJohn Keells Holdings நிறுவனம் உடனடி தீர்வுகள் அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் அரசியல் தலைமை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அந்த நிறுவனம், நல்லாட்சிக்கான மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும். குழப்பநிலையை தவிர்ப்பதற்காக மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீளவேண்டும் என்றால் அனைத்து தரப்பினரும் அரசியல் பொருளாதார ஸ்திரமின்மையை தவிர்ப்பதற்காகவும் பொருளாதார பேரழிவை தவிர்ப்பதற்காகவும் ஒன்றிணையவேண்டும் என அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏனைய முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும் இதேபோன்ற கருத்தினை வெளியிட்டுள்னனர்