Home செய்திகள் அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம் – வடக்கு கிழக்கில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம் – வடக்கு கிழக்கில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையைப் பதவி விலக கோரி  நாடு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக யாழ். மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை பொரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறுகின்றது. தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுவதால் அரச பேருந்து சேவைகளும் சோபையிழந்துள்ளதை காணமுடிகிறது. அதிபர், ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பாடசாலைகளுக்கு மாணவர்களது வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

அரச மற்றும் தனியார் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புகையிரத சேவை, தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.

இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மாணவர்களின் வரவின்மை காரணமாக வவுனியாவில்  பாடசாலைகள் பல வெறிச் சோடிக் காணாப்படுகின்ளறன.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிலும்  இப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாவட்டத்தின்  பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றது.

அதே நேரம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று (28) தம்பலகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை தம்பலகாமம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ், சிங்கள,முஸ்லிம் என 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

“கோட்டா வேண்டாம் நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடு, இந்த கோட்டா,இந்த மஹிந்த வேண்டாம் இந்தக் குடும்பம் வேண்டாம். இவர்களால் பட்ட கஷ்டம் போதும்,

எங்களால் வாழ முடியவில்லை வாழ்வதற்கு வழி கேட்டு வீதியில் இறங்கியுள்ளோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்பாரை மாவட்டத்திலும் போராட்டம்…

Exit mobile version