வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி போராட்டம்

100 நாட்கள் செயல்முனைவின்  99 ஆவது நாள் மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தில்  விலாங்குள கிராமத்தில் இன்று (07) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” “ நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை.

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்” “ 13 வது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது ” பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தினை   கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை இதன் போது முன்வைத்து போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.