கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையினர் போராட்டம்

சுகாதார துறையினர் போராட்டம்

கிழக்கு மாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள அதே நேரம், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து 16 சுகாதார தொழிற்சங்கள் இணைந்த கிழக்கு மாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தினால் சுகாதார துறையினர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் நடைபெற்றது.

IMG 0028 1 கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையினர் போராட்டம்

மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களச் சேர்ந்த சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் இந்த பேரணியில் கலந்துகொண்டதுடன் தேசிய சுகாதார சங்கங்களின் தலைவர்களும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் சேவைக்குரிய உரிமைகளை தந்துவிடு, ,சுகாதார நிர்வாக சேவையினை ஆரம்பி போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கவன ஈர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையினர் போராட்டம்