பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி வீதிப்போராட்டங்கள் நடத்தப்படும் – எதிர்க்கட்சி

பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் வீதிப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி  தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அரசாங்கத்தை பொதுத் தேர்தலுக்குச் செல்லுமாறு வற்புறுத்துவதற்காக தனது கட்சி தெருப் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் ஆளும் கட்சியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு சென்றுள்ளனர். நான்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு சென்று அமைச்சர் பதவிகளை அனுபவித்து வருகின்றனர். எனவே மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி புதிய பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.