மூன்றாவது தடுப்பூசி  வழங்குவதை நிறுத்துங்கள்-WHO

358827182 scaled e1586785670175 மூன்றாவது தடுப்பூசி  வழங்குவதை நிறுத்துங்கள்-WHO

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி சென்று சேரும் வரை மூன்றாவது தடுப்பூசி போடும் திட்டங்களை நிறுத்தும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் பேராவது தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.

இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள் மூன்றாவது தடுப்பூசி  போடும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி ஏழை நாடுகளில் நூறு பேருக்கு 1.5  தடுப்பூசியே கிடைத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

ilakku-weekly-epaper-140-july-25-2021