Home செய்திகள் இலங்கையின் பொருளாதார நெக்கடியும் மக்களின் வாழ்வியல் சவால்களும் | வேலம்புராசன் விதுஜா-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

இலங்கையின் பொருளாதார நெக்கடியும் மக்களின் வாழ்வியல் சவால்களும் | வேலம்புராசன் விதுஜா-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

6 இலங்கையின் பொருளாதார நெக்கடியும் மக்களின் வாழ்வியல் சவால்களும் | வேலம்புராசன் விதுஜா-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

வேலம்புராசன் விதுஜா-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

மக்களின் வாழ்வியல் சவால்கள்

‘‘இன்மையின் இன்னாதது யாதெனின்
இன்மையின் இன்மையே இன்னாதது’’.

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால் வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். ஆம் வறுமைக்கு நிகர் வறுமையே. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நம் நாட்டில் அன்றாடம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வசதியற்ற நிலையில் திண்டாடிக் கொண்டி ருக்கின்றோம். வாழ்வின் அனுபவங்களை கற்று ணர்ந்த முதியோர்களில் இருந்து இன்னமும் வெளியுலகம் காணாது தாயின் கருவறையில் வாழும் குழந்தைகள் வரை இன்றைய இலங்கையின் பொருளாதார நிலை தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

மாதாந்த வருமானம் பெறாதசாதாரண கூலிவேலைக்கு செல்பவர்கள் தொடங்கி மாதாந்த வருமானம் பெறும் அரச ஊழியர்கள் என அனைவருமே இன்று பெற்றோலிற்கும் மண்ணெண்ணைக்கும் தெருவோரம் வரிசையில் காத்திருக்கின்றனர். நாட்டில் பலரின் வீட்டு அடுப்போரங்களில் பூனை நிம்மதியாக ஓய்வெடுக்கின்றது. ஆசை ஆசையாய் வாங்கிய மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் ஓய் வெடுக்க துவிச்சக்கர வண்டியின் விலை மளமள வென அதிக ரித்துச்செல்கின்றது.

நகரமயமாக்கத்திற்கு ஏற்ப நாமும் எம்மை தகவமைத்துக் கொண்டது தவறாகி விட்டதோ என்று சிந்திக்கும் அளவிற்கு இன்றைய பொருளாதாரம் மாறிவிட்டது. சித்த மருத்துவத்தில் இருந்து ஆங்கில மருத்துவத்திற்கு பழக்கப்படுத்திக் கொண் டோம். ஆனால் இன்று பல நோய்களுக்கான ஆங்கில மருந்துகளைக்கூட பெற்றுக் கொள்ள முடிய வில்லை. விவசாயத்தில் ஏர் பூட்டி உழுவதற்கு பதில் உழவு இயந்திரங்களைபயன்படுத்த பழக்கப் படுத்திக்கொண்டோம்.

இன்று உழவு இயந்திர ங்கள் வீடுகளில் ஓய்வெடுக்க வயல்களில் நெல்லினை பயிரிட க்கூடவசதியற்றவர்களால் வெறுமையுடன் நின்று கொண்டிருக்கின்றோம். கூட்டெருவிற்கு பதில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தியது நல்ல விளைச்சலை தருகின்றது என்பதற்காக உர வகைகளை அதிகளவில் பயன்பாடடிற்கு கொண்டு வந்தோம். இன்று இரசாயண உரம் இன்றி கூட்டெருவினை தயாரிப்பதற்கு கூட ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

தமது குடும்பத்தை பொறுப் பேற்று நடாத்த வேண்டிய இளைஞர்கள் இன்று வேலைக்காக காத்திருப்பு பட்டியலில் நிண்றுகொ ண்டிருக்க இன்னொரு புறம் வேலைக்கு செல்வ தற்கு கூட வசதியற்ற நிலையில் வீட்டில் இரு ந்தே பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதென்பது ஒரு புறம் நன்மையே எனினும் நம்மில் பலர் இன்று வேலைவாய்ப்பபை இழந்து நின்றுகொண்டிருக்கின்றோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

கொரோனாவின் தாக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நாடளாவிய முடக்கத்தினால் நம்மில் பலர் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட வசதியற்றவர்களால் ஒரு வேளை உணவிற்கு கூட வழியற்றவர்களாய் மாற்றப்பட்டது போக இன்று படிப்படியாக அனை வருமே அந்த கொடிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சம் ஏற்படுகின்றது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போன்று இன்று எம்முடையநிலமை காணப்படுகின்றது.

கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இலங்கை மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியது. உயிர்ப்பு ஞாயிறு குண்டு வெடிப்பு, கோவிட்-19 பெருந்தொற்று, பண வீக்கம் உயர்வு, உரங்க ளின் இறக்குமதிகுறித்து விதிக்கப்பட்ட தடை, அந்நிய செலவாணி நெருக் கடி என ஒன்றின்மேல் ஒன்றாக ஏற்பட்டபிரச்சினை கள் இலங்கை அரசினையும் இலங்கை மக்களை யும் பிரச்சினைக்குள்ளாக்கியுள் ளது.

இலங்கை 2021ல் 100மூ இயற்கை வேளா ண்மை என்ற திட்டத்தை துவங்கியது.செயற்கை உரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேளாண் உற்பத்தியில் சரிவி ஏற்பட தொடங்கி யது. 2021 செப்ரெம்பர் மாதத்திற்குள் 50% வீழ்ச்சியை சந்தித்தது. இதன் பின்னணியில் உணவுப் பற்றாக் குறையும் ஏற்பட்டது. மேலும் இலங்கை பண மதிப்பு வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏற்றட்ட பணவீக்கத்தால் இன்ற ளவிலும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப் பட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம்.

நாழுக்கு நாள் அத்தியாவசிய பொருட் களின் விலை அதிகரிப்பு, பெற்றோலிய தட்டுப் பாட்டினால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினை, மின்சார தட்டுப்பாடும் மின்சார கட்டண அதிகரிப்பும், வேலைவாய்ப்பின்மை, பாதிப்புறும் குழுக் களுக்கென வழங்கப்படும் உதவிக்கொடுப்பனவு களின் தட்டுப்பாடு, இரசாயன உரங்களு க்கென விதிக்கப்பட்ட தடை கராணமாக ஏற்பட்ட பிரச்சினைகள், உணவுப்பொரு ட்களின்விலை உயர்வு என்பன காரணமாக நாட்டில் பெரும்பான்மை யான மக்கள் இன்று வறுமை என்னும் நெருப்பு வளையத்தினுள் சென்று கொண்டிருக்கின்றோம்.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வ தற்காக மக்கள் நாளாந்தம் வீதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும் வரிசையில் காவல் இருக்கி ன்றனர். உணவு பொருட்கள் முதல் சமையல் எரி வாயு மற்றும் எரிபொருள் வரை அனைத்து பொருட்களும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகி ன்றது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து இலங் கையில் ஐந்து லட்சம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றிருக்கின்றனர் என உலக வங்கி எச்சரித்தி ருக்கின்றது.

கேஸ் அடுப்பு இருந்த இடத்தில் மண்ணெண்ணை அடுப்பும் மண்ணெண்ணை அடுப்பு இருந்த இடத்தில் விறகு அடுப்பும் மாற்றம் பெற்றுவிட்டது. இருப்பினும் அதற்கான நீண்டகால தீர்வுகள் முன்வைக்கப்படாது தற்காலிக தீர்வுகளை நோக்கியே நகரவேண்டியதாக இருக்கின்றது. சுற்றி இருக்கும் நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட கடன்தொகையை அடைப்ப தற்காக நாட்டின் பல பகுதிகளை ஏனைய நாடுக ளிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது.

இன்னொரு புறம் தீர்மானிக்கப்பட்ட விலையை விட இரட்டிப்பு விலையில் பொரு ட்கள் விற்கப்படுவதென்பது எரியும் தீயில் எண்ணை ஊற்றுவது போன்ற செயலே. உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு முக்கிய கார ணமாக அமைவதே இன்று நாட்டின் பல இடங்க ளில் இடம்பெறும் பதுக்கல்களும் தான். இதனால் பாதிக்கப்படுவது நாட்டின் அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும்தான்.

Exit mobile version