பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இலங்கை, இந்தியா, மாலைதீவு இணக்கம்

20210804con 11 பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இலங்கை, இந்தியா, மாலைதீவு இணக்கம்

பாதுகாப்பு விவகாரத்தில் ” நான்கு தூண்களாக” விளங்கும் கடல்சார் பாதுகாப்பு, ஆட்கத்தல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையவெளி பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்துச் செயற்பட   இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன.

கடந்த வாரம்  மூன்று நாடுகளினதும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற இணையவழி மகாநாட்டிலேயே இந்த இணக்கம் காணப்பட்டது. பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான இந்த மகாநாடு புதன்கிழமை  இலங்கையினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இலங்கையின் படை உயரதிகாரிகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா தலைமை தாங்கினார். இந்தியாவின் பிரதி தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், மாலைதீவு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகத்தின் செயலாளர் அய்ஷாத் நூஷின் வாஹித் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

புலனாய்வை பகிர்தல்

இந்தியாவின் தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் கருணாரத்ன, மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா டிடி ஆகியோருக்கு இடையில் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் பின்னர் இந்த இணையவழி மகாநாடு கடந்தவாரம்  நடை பெற்றிருக்கிறது. முன்னைய பேச்சுவார்த்தையில் மூன்று நாடுகளும் புலனாய்வு தகவல்கள் பரிமாற்றத்தின் வீச்செல்லையை விஸ்தரிப்பதற்கு இணங்கியிருந்தன.

கடந்த வாரத்தைய இணையவழி மகாநாடு ஆறு வருட இடைவெளிக்கு பிறகு  பிறகு இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் மூன்று நாடுகளினதும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட பேச்சு வார்த்தைகளை  புதுப்பிப்பதாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தகக்கது.

அந்த ஆறு வருடங்களுக்கு முன்னரான பேச்சு வார்த்தைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த வாரத்தைய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட மகாநாடு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ”நான்கு தூண்களை” அடையாளம் கண்டிருக்கிறது. கடல்சார் இடர்காப்பும் பாதுகாப்பும், கடத்தலும் திட்டமிட்ட குற்றச் செயல்களும், பயங்கரவாதமும் தீவிரவாதமயமாதலும், இணையவெளி பாதுகாப்பு ஆகியவையே அந்த தூண்களாகும் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு விவகாரங்களில் ஒவ்வொன்றிலும் ஒத்துழைத்துச் செயற்படுவது தொடர்பில் ”விசேட யோசனைகள்” ஆராயப்பட்டன. கூட்டு ஒத்திகையும் பயிற்சியும் இதில் அடங்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.

மூன்று நாடுகள் மத்தியிலான இந்த ‘கொழும்பு பாதுகாப்பு கூட்டம்’ இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதை நாடி நிற்கிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு என்பது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்தபோது 2011 ஆம் ஆண்டில் அவரால்  முன்னெடுக்கப்பட்ட முன்முயற்சியாகும் என்று இலங்கை இராணுவத்தினால் விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இராணுவத்தையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட இந்த முன்முயற்சி இலங்கையுடனும் மாலைதீவுடனும் இந்தியா பகிர்ந்து கொள்கின்ற தற்போதைய புவிசார் மூலோபாய இயக்கவியலின் பின்புலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் வடமாகாணத்துக்கு அப்பால் இந்தியாவின் தென் எல்லைக்கு நெருக்கமாகவுள்ள தீவுகளில் ஒன்றில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க சீனாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது குறித்து இந்த வருட ஆரம்பத்தில் இந்தியா விசனம் வெளியிட்டது.

 குவாட்டுடன் ஈடுபாடு

மறுபுறத்தில்,’ குவாட்’ என்று அறியப்பட்ட (அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய அமைப்புடன் மாலைதீவின் ஈடுபாடு கடந்த வருடம் குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரத்தில் வளர்ச்சி கண்டுவந்துள்ளது. இப்ராஹிம் மொஹமட்  சோலீ அரசாங்கம் கடந்த வருடம்  அமெரிக்காவுடன் ‘பாதுகாப்பு உறவுமுறை’ உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டது. அதை இந்தியா பெரிதும் வரவேற்றது.

2020 நவம்பரில் மாலைதீவு அதன் கரையோரக் காவலர் மற்றும் கடல்சார் மீட்புப்பணி ஒருங்கிணைப்பு நிலையத்துக்காக ஜப்பானிடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை நன்கொடையாக பெற்றுக்ககொண்டது. அதேவேளை, மாலைதீவில்  இந்தியா கால்பதிப்பது குறித்து  அச்சம் கொள்கிற பிரிவினர் (பெரும்பாலும் எதிர்க்கட்சிக் குழுக்கள் ) அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை தெரிவுகளை எதிர்க்கின்றன.

நன்றி -The hindu

ilakku-weekly-epaper-140-july-25-2021