இலங்கையின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி – கடைசி முஸ்லிம் உறுப்பினரும் விலகல்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் மூன்றாவது முஸ்லிம்  உறுப்பினரும்  தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஏற்கனவே மூன்று முஸ்லிம் உறுப்பினர்களில், அஸீஸ் நிஸாருத்தீன், இந்திகாஃப் சூஃபர் ஆகியோர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலணியின் பதவிக்காலம் மே 28ம் திகதியுடன் முடிந்துள்ள நிலையில், இதன் அறிக்கை இன்னும் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம் உறுப்பினர்களின் கையொப்பம் இன்றியே அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் பதவி விலகியது குறித்து இப்போதைக்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று அதன் தலைவரும் பௌத்த துறவியுமான லகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான கலீலுர் ரஹ்மான் என்பவரே, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக, மே 26ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அறிவித்துள்ளார்.

Tamil News