Tamil News
Home செய்திகள் இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சிடையும் – உலகவங்கி

இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சிடையும் – உலகவங்கி

இலங்கை மின்சார உணவு எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் இல்லாதாவாறு அந்நியசெலாவணி முற்றாக முடிவடைந்துள்ளதால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 2024ம் ஆண்டு அளவிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையை நோக்கி முன்னேறும் என உலகவங்கி தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு கடன்கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உட்பட பல காரணங்களால் இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு நிச்சயமற்றவையாகவும்,குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஆபத்தை கொண்டனவையாகவும் காணப்படுகின்றன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version