இலங்கையின் பொருளாதார நெருக்கடி: மருந்துகளிற்கான தட்டுப்பாடு – மரண தண்டனையை அனுபவிக்கும் நோயாளர்கள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரிதமாக மாற்றம் ஏற்படாவிட்டால் பல நோயாளிகள் மரணதண்டனையை அனுபவிப்பார்கள் என மருத்துவர் ரொசான் அமரதுங்க சர்வதேச ஊடகமான  ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு காரணமாக மக்கள் விரைவில்உயிரிழக்கும் ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசியமான மருந்துகள் இல்லாததன் காரணமாக உயிர்காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகள் பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையிலேயே மருத்துவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை 80வீதமான மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றது எனினும் நெருக்கடி காரணமாக அந்நியசெலவாணி முடிவடையும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய மருந்துகள் முடிவடைகின்ற மருத்துவகட்டமைப்பு சீர்குலையும் நிலை காணப்படுகின்றது.

1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது- கோவிட் தொற்று சுற்றுலாத்துறையை மோசமாக பாதித்தது. அதிகரித்த எரிபொருள் விலைகள்,விவசாயத்தை மோசமாக பாதித்த இரசாயன உரத்தடை, இலங்கையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

180 மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என மருந்துகள் கொள்வனவுடன் தொடர்புபட்ட அதிகாரியொருவர் தெரிவித்ததாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.  டயலசிஸ் நோயாளிகளிற்கான ஊசிகள் உறுப்புமாற்று சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் மற்றும் புற்றுநோயாளர்களிற்கான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது.

இந்தியா ஜப்பான் உட்பட உலகநாடுகள் மருந்துபொருட்களை வழங்க முன்வந்துள்ளன ஆனால் அவை வந்தடைவதற்கு நான்கு மாதங்களாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ளவர்கள் உதவவேண்டும் என இலங்கையில் உள்ள மருத்துவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். Tamil News