ஜேர்மனியில் இலங்கைத் தமிழர்கள் போராட்டம்

165 Views

ஜேர்மனியில் இலங்கைத் தமிழர்கள் போராட்டம்

ஜேர்மனியில் இலங்கைத் தமிழர்கள் போராட்டம்: ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு, ஜேர்மன் அதிகாரிகளை வலியுறுத்தியும் இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

‘தமிழீழத்திற்கான மனித உரிமைகள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர். கடந்த ஆண்டு, ஜேர்மனி 50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை இலங்கைக்கு நாடுகடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply