இலங்கை போராட்டம் 1989இல் ஜேர்மன் ஒன்றிணைந்ததை நினைவுபடுத்துகிறது – ஜேர்மன் தூதுவர்

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்கள், 1989இல் ஜேர்மன் ஒன்றிணைந்ததை   நினைவுபடுத்துகிறது என   இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்,

‘இலங்கையின் மதிப்புமிக்க மக்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வளவு அமைதியான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நான் ஈர்க்கப்பட்டேன்.

1989இல் ஜேர்மன் ஒன்றிணைந்ததை அது நினைவுபடுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வலிமை பெற வாழ்த்துகிறேன்’ என பதிவிட்டுள்ளாார்.

Tamil News