போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டுப் பெற்ற இலங்கை அகதிகள் கைது

இலங்கை அகதிகள் கைது

போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டுப் பெற்ற இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் காந்த்ராஜா(44). இவர் இலங்கை அகதி என்பதை மறைத்து போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பான் அட்டை ஆகியவற்றைப் பெற்று, பின்னர் இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து 24.10.2019 அன்று இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார்.

இதேபோல, 2018 முதல் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை தீபம் நகரில் வசித்து வரும் இலங்கை அகதியான சூனிகண்ணன்  சுதர்சன் (40 ) கடந்த 22.7.2019 அன்று  போலி ஆவணங்கள் மூலம் இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார். இவர் மீது திருச்சி மாவட்டம் பொன்மலை, உப்பிலியபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பெரம்பலூர் நகர காவல் நிலையங்களில் ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றன.

காந்த்ராஜா, சுதர்சன் ஆகிய இருவரும் இலங்கை அகதிகள் என்பதை மறைத்து போலி ஆவணங்களைக் காட்டி இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றது குறித்த   பெரம்பலூர் மாவட்ட கியூ பிரிவு  காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட  காவல் துறையினர், இருவரையும்  கைது செய்துள்ளனர்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டுப் பெற்ற இலங்கை அகதிகள் கைது