அம்பாறை: முஸ்லீம் ஊடகவியலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல்

முஸ்லீம் ஊடகவியலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல்

கடந்த 02ம்  திகதி  அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முஸ்லீம் ஊடகவியலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல்:  ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளரை அக்கரைப்பற்று காவல்துறையினர்  கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளமை ஊடகவியலாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரைப்பற்று காவல்துறையினர்  கண்மூடித்தனமாக தாக்கி

கடந்த 02ம் திகதி காலை 11.00 மணியளவில் செய்தி சேகரிக்க செல்வதற்காக அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள தனது வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த போது குறித்த பகுதியால் சென்ற அக்கரைப்பற்று காவல்துறையினர் குறித்த ஊடகவியலாளரையும் அவரது சகோதரனையும் தாக்கியுள்ளனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் தமது உயிரை பணயம் வைத்து மக்களுக்காக  பணியாற்றி வருகின்ற நிலையில், அரசினாலும் காவல்துறையினராலும் ஊடக அடக்குமுறை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கெபிடல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி டீவி ஊடக பிராந்திய செய்தியாளராகவும் செயற்பட்ட குறித்த ஊடகவியலாளரின் நிறுவன உடையையும்   கிழித்து காவல்துறையினர் அவரைத் தாக்கியுள்ளனர் என ஊடகவியலாளர் தரப்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அன்னை திரேசாவின் நினைவு நாளில் அனைத்துலக ஈகைத்தினம் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

ilakku-Weekly-Epaper-146-September-05-2021