நியூஸிலாந்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் பலி

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் பலி

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் பலி: நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் லீன்மால் என்ற பிரபல பல்பொருள் சந்தையில் இன்று இடம்பெற்றுள்ளது. திடீரென தாக்குதலை நடத்திய நபர் மீது பொலிஸார் விரைந்து சூட்டை நடத்தியதில் குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஓக்லேண்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதல் மேற்கொண்ட நிலையில், பொலிஸாரினால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை பிரஜை, பத்து வருடங்களாக இங்கு வசிப்பவர் அவர் ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் எனவும் பொலிஸார் அவரை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததாகவும் நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களாக அவர் எங்கள் கண்காணிப்பிற்கு உரியவராக காணப்பட்டார் அந்த நபர் தாக்குதலை ஆரம்பித்து 60 செகன்ட்களில் கொல்லப்பட்டு விட்டார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரை கண்காணிப்பதற்காக அனைத்தையும் செய்தோம், 60 செகன்ட்களில் அவரை செயல் இழக்க செய்ய முடிந்தமை நாங்கள் அவரை எவ்வாறு உன்னிப்பாக அவதானித்தோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் பொருள் கொள்வனவிற்காகவே வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார் என பொலிஸார் கருதினார்கள்.  ஆனால் அவர் அங்கு கத்தியை வெளியில் எடுத்தார் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021