Home செய்திகள் அனைத்து நாடுகளுடனும் இலங்கை நட்புறவுடன் இருக்கும்- அமைச்சர் பஷில்

அனைத்து நாடுகளுடனும் இலங்கை நட்புறவுடன் இருக்கும்- அமைச்சர் பஷில்

pearl one news Basil Rajapaksa அனைத்து நாடுகளுடனும் இலங்கை நட்புறவுடன் இருக்கும்- அமைச்சர் பஷில்

‘ஒருமித்த வெளிவிவகாரக் கொள்கைக்கு மத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது’ என்று நோர்வே, துருக்கி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் துாதுவர்களிடம் தெரிவித்துள்ளார் அமைச்சர் பஷில்.

நோர்வே, துருக்கி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் துாதுவர்களுடன் நிதியமைச்சர்  பஷில் ராஜபக்சே கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த கூட்டத்தில், இரு தரப்பு உறவுகள், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை கலந்துரையாடப்பட்டன

இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க  சக்தி வலு தொடர்பில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நோர்வே துாதுவர் ஹில்ட்பேர்க் -ஹன்சென் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இலங்கையின் தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துருக்கி துாதுவர் ஆர்.டெமெற் செகர்சியோக்லு உறுதியளித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த இத்தாலி நாட்டின் துாதுவர் ரிற்றா ஜியுலியானா மனெலா நிதியமைச்சரிடம் உரையாடுகையில், இத்தாலி நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாவும் ஆகவே இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது அவசியம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version