எரிபொருள் விநியோக சீரின்மையால் இலங்கை போக்கு வரத்து சபை ஊழியர்கள் பாதிப்பு

இலங்கையில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை போக்கு வரத்து சபை ஊழியர்கள் தமது கடமைகளுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் தற்போது பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவண செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்க வடமாகாண இணைப்பாளர் ந.கோபி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது சாலைகளுக்கு இன்று, நாளை எரிபொருட்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றதே தவிர எவ்விதமான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் அத்தியாசிய சேவையை வழங்கும் நாங்கள் எரிபொருள்களை உரிய முறையில் பெற்றுக்கொண்டு சேவையை முன்னெடுக்க முடியவில்லை. இதனால் தற்போது க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட அரச சேவையை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் பலர் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு இ.போ.ச சாலை உத்தியோகத்தகள் சாரதிகள் , காப்பாளர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திற்கு எரிபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News