Tamil News
Home செய்திகள் இந்தியாவுடன் ECTA தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தை

இந்தியாவுடன் ECTA தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தை

தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (ETCA) தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக அலுவலகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பிரதான பேச்சாளர் கே.ஜே.வீரசிங்க தெரிவித்தார்.

இந்திய நாளேடான த ஹிந்து  கே.ஜே.வீரசிங்கவை மேற்கோள் காட்டி, “இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருந்து நடைமுறையில் உள்ள [ISFTA] ஐ விரிவுபடுத்தும் மற்றும் ஆழப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த முறை [2016 மற்றும் 2019 க்கு இடையில்] 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முடித்திருந்தது என செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், ETCA ஆனது இலங்கையில் உள்ள பிரிவினரிடமிருந்து கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டது, முக்கியமாக தேசியவாத குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு நியாயமற்ற நன்மையை வழங்குவதாகக் கருதியது.

Exit mobile version