இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

118365703 gettyimages 1232138888  இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள அனைத்து கோவிட் தடுப்பூசிகளும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக செயற்படுகின்றன என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

டெல்டா கொரோனா வைரஷிற்கு எதிராக தடுப்பூசி போடுவது சிறந்த பாதுகாப்பாகும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடை முறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளில் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப் பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021